சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. குடியரசு தினத்தையும் பொருட்படுத்தாமல், அங்கேயே மது குடிக்க வைத்து குடிமகன்களை அனுப்பி வைக்கின்றனர்.
இதனை ஆதம்பாக்கம் போலீசார் மற்றும் கலால் போலீசார் மதுக்கடைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே இந்த விவகாரத்தில் உயர் அலுவலர்கள் தலையிட்டு சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் கே.என். நேரு