சென்னை: திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் அருகே காசீம் என்பவர் புதியதாக அடுக்குமாடி கட்டடம் கட்டி வருகிறார். இந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுவதாகவும், மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்படுவதாகவும், கட்டடத்திற்கு சீல் வைக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விதிமீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்திற்கு திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஜெர்மனியில் அமைந்துள்ள கொலேன் பல்கலைக்கழகத்துக்கு ஒரு கோடி நிதி உதவி