சென்னையில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இசை கொண்டாடும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இது திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர். அவர்களைத் தவிர ஜேசுதாஸ், மனோ, பாம்பே ஜெயஸ்ரீ, உஷா உதுப், பவதாரணி மது பாலகிருஷ்ணன், முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.
சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன், விவேக், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் இளையராஜா பேசும்போது இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கான புதிய கட்டடத்தை தனது சொந்த செலவில் கட்டித் தருவதாக தெரிவித்தார்.