ETV Bharat / state

பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தியானம் செய்ய அனுமதி - MUSIC DIRECTOR ILAIYARAJA

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ilaiyaraja
ilaiyaraja
author img

By

Published : Dec 23, 2020, 3:55 PM IST

சென்னை பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு சென்னை 17ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தானே எழுதிய இசை கோர்ப்புகள், தனக்குச் சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும். தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை அனுமதிக்க கடும் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு, பின்னர் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க ஒப்புதல் தெரிவித்தது.

இளையராஜா இதனை ஏற்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இன்று (டிச.23) விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்திற்கு உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜாவின் தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், பிரமான பத்திரமாக இல்லாமல் மெமோவாக மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இளையராஜா தரப்பில் ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் தான் எப்போதும் வார்த்தை தவறியதில்லை. கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை என இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் இளையராஜா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார், ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் சென்று தியானம் செய்யவும், உடமைகளை எடுத்துவரவும் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும் இளையராஜாவுடன் அவரது உதவியாளர் ஒருவரும், இரண்டாம் இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளே சென்றுவரும் நடைமுறைகளுக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையராக வி. லட்சுமிநாராயணன் என்பவரை நியமித்து உத்தரவிட்டத்துடன், பொருள்களை எடுக்கும் தேதி குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேசி முடிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பிரபல மலையாளக் கவிஞர் சுகதா குமாரி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.