சென்னை: நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச.14) அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்றதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதைத் தான் வள்ளுவர் சொல்லி உள்ளார். அது நிஜமாகவே நடக்கும்போது அம்மாவுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கிறேன்.
அமைச்சர் பதவியை நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்வதில், நீங்கள் களத்தில் இறங்கி உள்ளீர்கள். பொறுப்பு அதிகமாகி உள்ளது. மக்களிடம் நல்ல பேரை, புகழை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "உங்க கட்சியினருக்கு அறிவு இருக்கா?" விதியை மீறி பேனர் வைத்த திமுகவினரை விளாசிய அறப்போர் இயக்கம்!