டெல்லியில் நாளை (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், “புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை (மே 28) திறந்து வைக்கவுள்ளார். ஓர் குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டடத்தை கட்டிமுடிக்க துணைபுரிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
-
#MyParliamentMyPride @narendramodi @PMOIndia #NewParliamentBuilding pic.twitter.com/SXhaAiymVc
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MyParliamentMyPride @narendramodi @PMOIndia #NewParliamentBuilding pic.twitter.com/SXhaAiymVc
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 27, 2023#MyParliamentMyPride @narendramodi @PMOIndia #NewParliamentBuilding pic.twitter.com/SXhaAiymVc
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 27, 2023
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், இடைநிலைக் கொள்கைகள் மற்றும் முடிவெடுப்பதற்கான இடமாக இந்த புதிய கட்டடம் மாற நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Sengol: சோழர்களின் சொத்தா?. பாண்டியர்களின் கலை நயமா?.. தென்காசியில் ஒரு செங்கோல்