ETV Bharat / state

ஐஐடி பேராசிரியர்களுக்கு இன்றைக்குள் ஆஜராக சம்மன்! - iit madras student suicide case

சென்னை: கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேரை விசாரணைக்கு ஆஜராகக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

IIT madras student fathima suicide case: summon to madras IIT professors to appear today for investigation
author img

By

Published : Nov 18, 2019, 1:03 PM IST

சென்னை ஐஐடி விடுதி அறையில் கடந்த 8ஆம் தேதி இரவு மனிதநேயம் பாடப்பிரிவு படித்து வந்த முதுகலை மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமாவின் தேர்வு மதிப்பெண் குறைந்ததே தற்கொலைக்கான காரணம் என அப்போது கூறப்பட்டது.

ஆனால், தற்கொலைக்கான காரணம் குறித்து ஃபாத்திமா இறப்பதற்கு முன், தனது அலைபேசியில் பதிவுசெய்து வைத்திருந்த சிலத் தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், தனது மகள் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்யவில்லை என்றும், ஐஐடி பேராசிரியர்கள் சிலர் கொடுத்த மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார் என்றும் பகீரங்கத் தகவலை வெளியிட்டார்.

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு காவல் துறை இயக்குநர், சென்னை காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து ஃபாத்திமாவின் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் மனுவையும் அவர் அளித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டூர்புரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி விசாரணை நடத்தினார்.

இதன் அடுத்த கட்டமாக ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமசந்திர காரா, மெலின்ஸ் பிராமே ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி இன்றைக்குள் மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மாணவி தற்கொலை தொடர்பாக வதந்திகளைப் பரப்பாதீர்' - சென்னை ஐஐடி

Intro:Body:* ஐ.ஐ.டி பேராசிரியர்களுக்கு சம்மன்*

கேரள மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி விடுதி அறையில் கடந்த 8 ஆம் தேதி இரவு மனிதநேயம் பாடப்பிரிவு முதுகலை மாணவி பாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரளாவைச் சேர்ந்த பாத்திமாவின் தேர்வு மதிப்பெண் குறைந்ததே தற்கொலைக்கான காரணம் என அப்போது கூறப்பட்டது.

ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து பாத்திமா இறப்பதற்கு முன் தனது அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த சில தகவலின் அடிப்படையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீஃப் தனது மகள் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்யவில்லை, ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சிலர் கொடுத்த மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர், தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து பாத்திமாவின் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் மனுவையும் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டூர்புரம் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு அதிரடியாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி விசாரணை நடத்தினார்.

இதன் அடுத்த கட்டமாக ஐ.ஐ.டி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமசந்திர காரா மற்றும் மெலின்ஸ் பிராமே ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி இன்றைக்குள் மூன்று பேராசிரியர்களும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.