ETV Bharat / state

சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் - ஐஐடி சென்னை

சென்னை: சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை
சென்னை
author img

By

Published : Jan 11, 2021, 3:01 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது, உருமாறிய கரோனா தொற்றும் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வைரஸ் துகள்கள் நுரையீரலுக்குச் செல்வது சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவர்களுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்விற்கு ஐஐடி சென்னையின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, அர்னாப் குமார் மல்லிக், சவுமல்யா முகர்ஜி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சர்வதேச புகழ்பெற்ற இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டன

இது குறித்து பேசிய பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, “நுரையீரலில் வைரஸ் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதனை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்கு கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது.

மூச்சுத்திணறல், குறைந்த சுவாச விழுக்காடு கொண்டிருப்பது நுரையீரலில் வைரஸ் படிவதற்கான வாய்ப்புகளை அதிகம் உள்ளது. எனவே, சுவாச நோய்த்தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.