சென்னை: கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியைச் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். "ஓஷன் வேவ் எனர்ஜி கன்வெர்ட்டர்" என்ற இந்த கருவி, கடந்த நவம்பர் மாதம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
தற்போது இந்த கருவி தூத்துக்குடி கடற்கரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல்பகுதியில், 20 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் கடல் அலைகளிலிருந்து 1 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகளை அடைய உதவும் என தெரிகிறது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடியின் பெருங்கடல் பொறியியல் துறையின் பேராசிரியர் அப்துஸ் சமத் கூறுகையில், "இந்தியா 7,500 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 54 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இத்திட்டம் நாட்டின் எரிசக்தி தேவையில் கணிசமான அளவை பூர்த்தி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைதான் எங்களது ஆராய்ச்சியின் நோக்கம்" என்றார்.
இதையும் படிங்க:கேரளா NIT மாணவர் மரணம்.. மகன் கொல்லப்பட்டதாக தந்தை புகார்!