ETV Bharat / state

மருந்து விநியோகத்தில் சிக்கல்களை தவிர்க்க சென்னை ஐஐடி ஆய்வில் பரிந்துரைகள் - மருந்து விநியோகத்தில் சிக்கல்களை தவிர்க்க சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி - க்ரியா பல்கலைக்கழகம் இணைந்து தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் பஞ்சாப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், மருந்து விநியோகத்தில் உள்ள செயல்பாடு, விநியோக மற்றும் உட்கட்டமைப்புச் சவால்கள் கண்டறியப்பட்டு, மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வழி முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
author img

By

Published : Jan 24, 2022, 7:44 PM IST

சென்னை: சென்னை ஐஐடி - க்ரியா பல்கலைக்கழகம் இணைந்து தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் பஞ்சாபில் நடத்தப்பட்ட ஆய்வில், மருந்து விநியோகத்தில் உள்ள செயல்பாட்டு, விநியோக மற்றும் உட்கட்டமைப்புச் சவால்கள் கண்டறியப்பட்டு, மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வழி முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் இந்தியாவில் சராசரி மருந்து விநியோக விகிதமான 30.95 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் விநியோக விகிதங்கள் 53 விழுக்காடாக உயர வாய்ப்புள்ளது.

இந்திய பொது சுகாதார அமைப்பில் அத்தியாவசிய மருந்து கொள்முதல் மாநில அளவிலான மருத்துவ சேவை நிறுவனங்களால் (MSC) மேற்கொள்ளப்படுகிறது. கேரளா போன்ற சில மாநிலங்கள் ஒரு மையப்படுத்தப்பட்ட முறையைப் பின்பற்றுகின்றன. பஞ்சாப், தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் தனியார் மற்றும் அரசும் இணைந்து செய்கின்றன.

2015 முதல் 2019 வரையில் ஆய்வு

தற்போதைய மருந்து விநியோக அமைப்பில் விநியோக, உட்கட்டமைப்புச் சவால்கள் இருந்தாலும், இந்த நடைமுறையை அதிகளவில் எளிதாக்குவதற்கும், மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் மாநில அரசுகளால் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அத்தியாவசிய மருந்துகளின் கொள்முதல் செய் முறையில் சில அடையாளம் காணப்பட்ட சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நான்கு மாநிலங்களில் இருந்து மருந்து கொள்முதல் தரவு மற்றும் ஒப்பந்தத் தகவல்கள் தற்போதைய ஆய்வின் மையப் பொருளாக உள்ளன.

சென்னை ஐஐடி  ஆய்வு
சென்னை ஐஐடி ஆய்வு

2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்துக்குச் செய்யப்பட்ட இந்த ஆய்வின் மூலம் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில், ஆர்டர்களைப் பூர்த்தி செய்வதற்கு ஆர்டர் நேரம் மிகவும் முக்கியமானது மற்றும் மாநிலங்கள் தங்கள் ஆர்டர்களை பேட்ச் செய்வதற்குப் பதிலாக விட்டு விட்டு அனுப்பலாம் என்ற கருத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. விநியோகஸ்தர்களைத் தவிர்த்து அவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற தற்போதைய நடைமுறை முக்கியமானது என்றாலும் அதைப் படிப்படியாகச் செய்வது சிக்கல்களைத் தீர்ப்பதில் பலன் தரும்.

விநியோகஸ்தர்களை ஒட்டுமொத்தமாகக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதை விட, அவர்களின் நிலுவைக்கேற்ப படிப்படியாகச் சேர்த்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

மாநில அளவிலான மருந்து கொள்முதலில் முக்கிய சிக்கல்கள் பின்வருமாறு

விநியோகஸ்தர்களின் வரையறைச் சிக்கல்கள்: மருந்து நிறுவனங்களுக்கு மின் பற்றாக்குறை, தளவாட மற்றும் மூலப்பொருள் கொள்முதல் சவால்கள் போன்ற செயல்பாட்டு மற்றும் உள்கட்டமைப்பு சிக்கல்கள் பல உள்ளன. மேலும், சந்தையில் கடும் போட்டி நிலவுவதால் லாபம் ஈட்ட முடியாமல் உள்ளனர்.

ஆர்டர்களின் தொகுப்புகள்: மாநிலங்களால், அத்தியாவசிய மருந்துகளின் பெரிய மொத்த ஆர்டர்கள் செய்யப்படுகின்றன. அதே விநியோகஸ்தர் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கலாம்.

மாநிலங்கள் விதிக்கும் அபராதங்களும் கறுப்புப் பட்டியலிடுதலும்: அத்தியாவசிய மருந்துகள் சரியான நேரத்தில் டெலிவரி செய்யப்படாவிட்டால் ஆர்டர்களின் விலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் தாமதம் ஏற்பட்டால், விநியோகஸ்தர், அந்த மாநிலத்தால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் அம்மாநிலத்துடன் வணிகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இது ஒரு கடுமையான நடவடிக்கை என்றும், இதனால் வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்றும் நிறுவனங்கள் ஒருமனதாகக் கருதுகின்றன.

விநியோகச் சங்கிலிகளைப் பொறுத்தவரை போக்குவரத்து மற்றும் சரக்கு செலவுகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.