ETV Bharat / state

ஐஐடி மாணவர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு வகுப்புகள்

author img

By

Published : Mar 15, 2020, 7:26 PM IST

சென்னை: குவி என்ற ஸ்டார்ட் அப் தொண்டு நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்தவுள்ளது.

IIT Madras
IIT Madras

வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று பணிகளை பெறுவதற்காக மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் சார்பில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படும். ஆனால், கரோனா பாதிப்பால் இம்மாதிரியான வகுப்புகளை நடத்துவதை பயிற்சி மையங்கள் நிறுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில், குவி என்ற ஸ்டார்ட் அப் தொண்டு நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் திறன் மேம்பாட்டு வகுப்புகளை 30 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.

சிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த 100 தொழில்நுட்பவியலாளர்கள் இந்த வகுப்புகளை நடத்த தானாக முன்வந்துள்ளனர். இதுகுறித்து குவியின் தலைமை செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், "மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், பணிகளை பெறுவதற்கான திறன்கள் உண்டா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு இந்த தொண்டு சிறியதாக இருந்தாலும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த முயற்சியை முன்னெடுப்பதற்காக தொழில்நுட்பவியலாளர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவுள்ளார்கள். தகுதியான மாணவர்களுக்கு திறன்களை வளர்த்தெடுப்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். அதில், மொழி ஒரு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். ஆங்கிலத்தை தவிர தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப திறன்களை கற்றுக் கொடுக்கிறோம்" என்றார்.

மாணவர்கள் மென்பொருள் துறையில் சிறந்து விளங்குவதற்காக குவி நிறுவனமானது மாணவர்களுக்கு தாய் மொழியில் திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொரோனாவை தடுக்கும் முயற்சியில் மகா சக்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.