ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இயங்கும் ஜியூவிஐ ஸ்டார்அப் நிறுவனம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுடன் இணைந்து 10 லட்சம் இந்தியர்களை ஒரே நேரத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைத்திடத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பான 'ஏஐ-ஃபார்-இந்தியா 1.0’ (‘AI-For-India 1.0) ஆன்லைனில் நடைபெறும் மிகப்பெரிய கோடிங் வகுப்பு என்ற உலகச் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட ஆர்வமுள்ள 8 முதல் 80 வயதுக்குள்பட்ட நபர்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடத்திடத் திட்டமிட்டுள்ளனர்.
இதில் பங்கேற்போர் ஜியூவிஐ- இன்AI-for-India வலைத்தளமான https://www.guvi.in/AI-for-India?utm_source=online&utm_medium=articles&utm_campaign=aiforindia என்பதில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஜியூவிஐ-இன் இணை நிறுவனரான ஸ்ரீதேவி அருண் பிரகாஷின் நினைவாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பில்லியன் கணக்கான இந்தியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவில் பயிற்சி அளித்து, அத்துறையில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த வகுப்பில், பங்கேற்பாளர்கள் தொழில் வல்லுநர்களிடமிருந்து பைத்தானைப் பயன்படுத்தி ஃபேஸ் ரெககனஷேசன் செயலியை உருவாக்க கற்றுத்தரப்படும். இதில் அனைத்துச் சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உலகச் சாதனை நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், கோடிங் திறன் மேம்பாட்டுத் தளமான ‘கோட்காட்டா’வை இலவசமாக உபயோகிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய ஜியூவிஐ-இன் இணை நிறுவனரான எஸ்.பி. பாலமுருகன் கூறுகையில், “இந்த AI முயற்சி, ஆர்வமுள்ள அனைத்து இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சாமானிய மக்களிடம் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்குமா?