எக்ஸ்பீரியன்ஷியல் டெக்னாலஜி இன்னோவேஷன் சென்டர் எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஹாப்டிக்ஸ் மீதான சிறப்பு மையத்துடன் கூடிய ஐஐடி மெட்ராஸ் குழு, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து, பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சிக் கருவிகளை உருவாக்கியுள்ளது.
விர்ச்சுவல் ரியாலிட்டி, கேமிங் தொழில்நுட்பங்கள், கிளவுட், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கருவிகளை உருவாக்கியுள்ளனர் (SmartNRP மற்றும் SmartFHR).
இவை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க பயன்படும். பின்னர் தாய் சேய் இறப்பு அதிகமாக இருக்கும் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருவியை, ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று, தேசிய சுகாதார இயக்கத்தின் தமிழ்நாடு இயக்குநரான மரு. டேரேஸ் அகமது வெளியிட்டார்.
இதையும் படிங்க: நடிகர் சிவகுமார் எழுதிய 'திருக்குறள் 50' நூல் வெளியீடு