ETV Bharat / state

சென்னை ஐஐடியின் வளர்ச்சியை தொற்றுநோயால் தடுக்க முடியவில்லை - இயக்குநர் காமகோடி - iit madras director kamakoti

சென்னை ஐஐடியின் வளர்ச்சியை தொற்றுநோயால் தடுக்க முடியவில்லை என சென்னை ஐஐடியின் 63ஆவது நிறுவன நாள் விழாவில் அதன் இயக்குநர் காமகோடி பேசினார்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
author img

By

Published : Apr 27, 2022, 9:59 PM IST

சென்னை: சென்னை ஐஐடியின் 63ஆவது நிறுவன நாள் விழா நேற்று (ஏப்.26) கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்தில் ஐஐடியின் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விநிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் உயர்மட்ட மதிப்பை சென்னை ஐஐடி மீண்டும் வென்றுள்ளது.

இதன் தரவரிசையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஒட்டுமொத்த பிரிவிலும், 2016-2021 வரை ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக பொறியியல் பிரிவில் முதலிடம் பெற்று இருக்கிறது. 'ஆராய்ச்சிக்கான கல்வி நிறுவனங்கள்' பிரிவில் 2021ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி 2ஆம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றுக்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை ஐஐடியின் 63ஆவது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் விருது: இதில் கலந்து கொண்டு பேசிய காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் முன்னாள் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், "சமூகத்திற்குப் பயனளிக்கும் புதுமையான தளங்களை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. ஆன்லைன் கல்வியின் மேம்பாட்டிற்கு முன்னோடியாக இந்நிறுவனம் திகழ்ந்து வருகிறது. தரவு அறிவியல் மெய்நிகர் பிஎஸ்சி பட்டப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடி விழா
சென்னை ஐஐடி விழா

சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்கா புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் சிறந்த பணியாற்றி வருகிறது. தொழில் மற்றும் கல்வித்துறை இடையிலான கூட்டு ஆராய்ச்சியால் மிகச்சிறந்த பயன்அளிப்பது தற்போதைய தேவையாகும். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்களின் நிபுணத்துவத்தின் கீழ், இளம் தலைமுறையினர் சமூகம் தொடர்பான செயல்களில் பங்கேற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநரும், மின்பொறியியல் துறையின் பேராசிரியருமான, பாஸ்கர் ராமமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது: நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடியின் இயக்குநர் வி.காமகோடி,“ சென்னை ஐஐடியின் வளர்ச்சியை தொற்றுநோயால் தடுக்க முடியவில்லை. எண்ணற்ற ஆராய்ச்சி, ஆலோசனை, சமூகப் பொறுப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயிற்சிகள் ஆகியவை நடைபெற்றதுடன் ஏராளமான காப்புரிமைகளும் பெறப்பட்டுள்ளன. முன்னாள் மாணவர்கள் பலர் இந்த கல்வி நிறுவனத்திற்காக மிகப் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளனர் எனக் கூறினார்.

2020, 2021ஆம் ஆண்டு சிறந்த முன்னாள் மாணவர் விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டு நிறுவன நாளில் அறிவிக்கப்பட்டது. இவர்களில், 5 முன்னாள் மாணவர்கள் நேற்று விழாவில் நேரில் பங்கேற்று தங்கள் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- ராதாகிருஷ்ணன்ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.