ETV Bharat / state

சென்னை ஐஐடியில் ஆன்லைன் பிஎஸ்சி டிகிரி

சென்னை ஐஐடியில் கொண்டுவரப்பட்டுள்ள பி.எஸ்சி (BSc) புரோகிராமிங் அண்ட் டேட்டா ஸயன்ஸ் டிகிரிக்கு (Programming and Data Science) முதன் முறையாக 8 ஆயிரத்து 154 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி
author img

By

Published : Dec 9, 2020, 8:10 PM IST

சென்னை : உலகில் முதல் முறையாக சென்னை ஐஐடியில் கொண்டுவரப்பட்டுள்ள பிஎஸ்சி (BSc) புரோகிராமிங் அண்ட் டேட்டா ஸயன்ஸ் ஆன்லைன் படிப்பிற்காக முதன்மையாக 8,154 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,922 மாணவிகளும், 6,232 மாணவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்காக, பல்வேறு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், கல்வி பின்னணியைக் கொண்டவர்களும் தகுதிச்சுற்றுக்கு விண்ணப்பித்திருந்தனர். குறிப்பாக கலை, அறிவியல், வர்த்தகம் போன்ற கல்வி பின்னணியைக் கொண்ட 1,593 மாணவர்கள், பொறியியல் பின்னணியைக் கொண்ட 3,450 மாணவர்கள் அடங்குவர். மொத்தமாக தகுதிச்சுற்றுக்கு 30 ஆயிரத்து 276 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நான்கு வாரங்களுக்கு நடத்தப்பட்டன. பின்பு அவ்வபோது தேர்வு நடத்தப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்ற 8 ஆயிரத்து154 ஆயிரம் பேர் இந்த இளங்கலை படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டிய சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி கூறுகையில் “தகுதிச்சுற்றில் வெற்றிப் பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். ஐஐடி சென்னை, BSc டிகிரியின் பவுண்டேஷன் லெவலைச் சேர்ந்த முதல் பேட்ச் மாணவர்களை அன்புடன் வரவேற்கிறது. மாணவர்கள் மகத்தான அளவில் கற்றுக்கொள்ளும் அனுபவத்தை அளித்திட எல்லாவிதமான சாத்தியக் கூறுகளையும் செய்து வருகிறது. இந்த படிப்புகள் அதிநவீன ஆன்லைன் இணைய முகவரிகள் வாயிலாக அளிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு லைவ் செஷன்களில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தேர்வுகள் நேர்முகமாக நடத்தப்படுவதால் புரோகிராமின் கல்வியின் கடுமைத்தன்மை சீராக பராமரிக்கப்படுகிறது “ என்றார்.

இந்த படிப்பு குறித்து பேசிய பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், ” இந்த படிப்பு மாணவர்களுக்கு அவர்களின் சுய வேகத்தில் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக ஏராளமான வசதிகளை அளிக்கிறது. இந்த புரோகிராமில் மூன்று வெவ்வேறு கட்டங்கள் உள்ளன – பவுண்டேஷன், டிப்ளோமா மற்றும் டிகிரி கோர்ஸிற்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளும்போது தங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ள முடியும்." என்றார்.

ஐஐடியில் பயில வேண்டும் என்ற கனவு கொண்ட மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் இந்த இளங்கலை ஆன்லைன் படிப்பு அமைந்துள்ளது. இரண்டாம் தகுதிச்சுற்று விரைவில் ஆரம்பமாகபோவதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பதை பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்று, மூன்றாயிரம் ரூபாய் கொடுத்து விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியாகும். விண்ணபங்களை https://www.onlinedegree.iitm.ac.in என்ற இணைய முகவரிக்குச் சென்று நிரப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படி: பேப்பர் கப்பில் இவ்வளவு ஆபத்தா? அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.