ETV Bharat / state

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளித்த ஐஐடி

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தேர்வுச் செய்து டீச் இன் 10 என்ற திட்டத்தின் மூலம் பாடங்களை புரிந்து கற்றுத்தரும் பயிற்சியை சென்னை ஐஐடி அளித்துள்ளது. இந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு கற்பித்தலில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன், தெளிவும் கிடைத்துள்ளது எனக் கூறுகின்றனர்.

IIT imparted teaching training to government school students
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளித்த ஐஐடி
author img

By

Published : Feb 28, 2023, 10:45 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளித்த ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடி, அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வுச் செய்து டீச் இன் 10 என்ற கற்க, கற்றுக்கொள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து https://www.teachtolearn.co.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 30 கிராமப்புற மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டு, 6 மாதங்களாக சென்னை ஐஐடியை சேர்ந்த 60 மாணவர்களால் பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. மாணவர்கள் சனிக்கிழமைகளில் ஐஐடியில் வந்து கற்றுக் கொண்டுள்ளனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கு பின்னர் ஒவ்வொருவரும் 10 நிமிட கற்பித்தல் விளக்க வீடியோகளை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கான ஒட்டுமொத்த வளர்ச்சி, கிராமப்புற மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி (பிப்.28) நேற்று 30 அறிவியல் கற்பித்தல் வீடியோக்களை ஐஐடியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து சென்னை ஐஐடியின் அகடாமி கோர்சஸ் டீன் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, ’அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களே கற்பித்தலுக்கான வீடியோ தயார் செய்கின்றனர். மாணவர்கள் வீடியோ தயார் செய்யும் போது அதனை பார்த்து அவர்களுக்கும் நம்பிக்கை வந்து செய்கின்றனர். சர்வதே தரத்திலான வசதிகள் ஐஐடியில் இருக்கிறது.

மாணவர்கள் ஆசிரியர் ஆக வேண்டும் என விரும்பினால் இந்த திட்டத்தின் மூலம் அதிகளவில் உற்சாகம் கிடைக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களை ஐஐடி வளாகத்தை தெரிந்துக் கொண்டு படிப்பதற்கான ஆர்வத்தை உண்டு செய்ய அழைத்து வருகிறோம். மாணவர்கள் கற்றுக் கொண்டு அவர்களாகவே 10 நிமிடம் வீடியோ கற்பித்தல் குறித்து தயார் செய்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் பிஎஸ் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் சேர விரும்பினால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். அது போன்ற அளிக்கப்பட்ட பயிற்சியால் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடி பட்டத்தை பெற உள்ளனர். தற்பொழுது நல்ல வேலை வாய்ப்பு உள்ள படிப்பாக இருக்கிறது. நிறைய கம்பெனிகளில் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. மருத்துவம், தரவுகளை அளிப்பது போன்றவற்றிக்கு இந்தப் பாடப்பிரிவு தேவைப்படுவதாக இருக்கிறது.

அனைத்துத் துறையிலும் வேலை வாய்ப்புகள் டேட்டா சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு உள்ளது. 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் சேர்க்கப்படுவாார்கள். அவர்கள் நேரடியாகவும்,ஆன்லைன் மூலமாகவும் படிப்பார்கள். டேட்டா சயின்ஸ் படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், பட்டயம், பிஎஸ்சி பட்டமும், பிஎஸ் பட்டம் 4 வது ஆண்டில் வழங்கப்படுகிறது. ஓராண்டு முடிந்ததும் சான்றிதழ் பெற்றுக் கொண்டு பணிக்கு செல்கின்றனர். 30 ஆயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டு வருகின்றனர். ஆண்டுத்தோறும் 7 ஆயிரம் மாணவர்கள் சேர்கின்றனர். 3 ஆண்டுகள் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டில் 4 வது ஆண்டு முடிவடையும்.

சென்னை ஐஐடிக்கான ஜெஇஇ தேர்வினை எழுதி தமிழ்நாட்டில் இருந்து 10 சதவீதம் மாணவர்கள் படித்துக் கொண்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களை சேர்ப்பதற்காக பிஎஸ் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவை துவக்கி நடத்தி வருகிறோம்’ என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்ட 2 ம் ஆண்டு ஆராய்ச்சி மாணவர் நித்ய ஸ்ரீமுருகன் கூறும்போது, ’டீச் இன் 10 என்ற திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வுச் செய்து 10 நிமிடம் ஒரு குறிப்பிட்ட பாடத்தை குறித்து பேச வேண்டும். தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடம் குறித்தும், ஐஐடியில் உள்ள வசதிகள் குறித்தும் வாரம்தோறும் எடுத்துக் கூறினோம். மாணவர்கள் வரும் போதே நன்கு கற்றுக் கொண்டுத்தான் வந்தனர். அவர்களுக்கு இங்கு கற்பிக்கும் போதும் நன்றாக கற்றுக்கொண்டனர்.

டீச் இன் 10 என்ற திட்டத்தில் பயிற்சி பெற்ற பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமது யாசீப் கூறும்போது, ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பாடம் குறித்து கற்பித்தனர். இதனால் தங்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்தது. மேலும் தொடர்பு கொள்வது, தெளிவாக கற்பித்தல் குறித்தும் தெரிந்துக் கொண்டோம்’ என கூறினார்.

மாணவி ஓவியா
மாணவி ஓவியா

டீச் இன் 10 என்ற திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவி காரணி,புதுச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஓவியா கூறும்போது, ’தனக்கு கற்பிப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டேன். இங்கு வந்து கற்றுக்கொள்ளும் போதுத் தான் ஆசிரியர்கள் எவ்வளவு படித்தால், மாணவர்களுக்கு தெளிவாக கற்பிக்க முடியும் என்பதை தெரிந்துக் கொண்டேன். இதற்கு முன் சென்னை ஐஐடியில் இருந்து எடுத்தப்படத்தை பார்த்தேன். அதனால் இந்த இடத்திற்கு போக வேண்டும் என விரும்பினேன்.

ஆனால் இங்கு வந்து பார்த்தால் மரம் வளைந்து வளைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தளவு பெரிய வளாகத்தை தற்பொழுதுத் தான் பார்க்கிறேன். ஐஐடிக்கு வந்து பெற்ற பயிற்சியை அனுபவமாக பார்க்கிறேன். நான் வழக்கறிஞர் பணிக்கு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு முக்கியமாக பேச வேண்டும். இங்கு பெற்ற பயிற்சியால் நன்றாக பேசுவதற்கும், தைரியமாக இருக்கவும் கற்றுக் கொண்டேன். அதனை இந்தப் பயிற்சியில் இருந்து எடுத்துச் செல்கிறேன்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு வளர்ச்சி அடைகிறது - பொடி வைத்து பேசிய துணை குடியரசுத்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.