சென்னை: சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தினர் (ஐஐடி) ஆற்றல் சேமிப்பைக் கருத்தில் கொண்டு, எல்இடி விளக்குகள், திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிக விலையுள்ள பொருளுக்கு மாற்றான படிமத்தை கண்டறிந்துள்ளனர்.
இந்த படிகப் பொருள் ஹலைடு - பெரோவ்ஸ்கைட்ஸ் என அழைக்கப்படுகிறது. படிகமானது தொகுக்கப்பட்டபோது சிதைவுற்று ஒரு தீவிர வெள்ளை ஒளி வெளியிடப்படுகிறது.
சிறந்த மாற்று படிகம்
இதுகுறித்து வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் அரவிந்த் சந்திரன் பேசுகையில், “ இது தேர்ந்தெடுக்கப்பட்ட துல்லிய அணுக்களுடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அணுக்களின் குறிப்பிட்ட கலவையைச் சேர்த்து ஒருங்கிணைத்த போது, அது சிதைவுற்று தீவிர வெள்ளை ஒளியை வெளியேற்ற வழிவகுத்தது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த பிரகாசமான வெள்ளை ஒளி உமிழ்ப்பானானது, வழக்கமான அதிக விலை கொண்ட பொருளுக்கு மாற்றாக விளங்கும். இதன் மூலம் ஆற்றல் செலவை தனித்துவமாக சேமிக்க முடியும்” என்றார்.
ஐஐடி ஆராய்சிக் குழுவினரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றப்பட்டுள்ளது. மேலும் இது இந்திய அரசின் எஸ்இஆர்பி(SERB) தொழில்நுட்ப விருதையும் தட்டிச் சென்றுள்ளது.
தங்களின் கண்டுபிடிப்பான பெரோவ்ஸ்கைட்டைப் பயன்படுத்தி எல்இடிகளை தயாரிக்க ரூ. 30 லட்சம் மானியத் தொகையைப் பயன்படுத்தவும் ஆராய்சிக் குழு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோமாளிகளே 'இல்லம் தேடி கல்வி' திட்டம்தான் திராவிடம் - ஸ்டாலின் அதிரடி