ETV Bharat / state

'ஐஐடியில் மாநில வாரிய இடஒதுக்கீடுக்கு எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்' - முரளிதரன் - parlement

சென்னை: "ஐஐடியில் அந்தெந்த மாநில மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுக்க வேண்டும்" என்று முன்னாள் மாணவர் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் மாணவர் முரளிதரன் பேட்டி
author img

By

Published : Jul 14, 2019, 8:48 PM IST

இது குறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் ஐஐடிக்கள் தொடங்கப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. தற்போது 23 ஐஐடிக்கள் உள்ளன. இங்கு மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டில் 2008ம் ஆண்டு வரை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மட்டும் தான் இடம்பெற்றிருந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் 2008ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இடஒதுக்கீடு மூலம் 37,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் 23 மாநிலங்களில் இயங்கும் ஐஐடிக்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு 50விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 விழுக்காடு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பிக் கொள்ளலாம். அப்போதுதான் மாணவர்களின் கல்வி தரம், இடபற்றாக்குறை தீரும். இதற்கு அந்தெந்த மாநில எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

Intro:ஐஐடியில் அந்த மாநில மாணவருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
முன்னாள் மாணவர் பாராளுமன்றத்தில் எம்.பி.கள் வலியுத்த கோரிக்கை Body:

சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் அந்த மாநிலங்களின் மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.கள் வலியுறுத்த வேண்டும் என ஐ.ஐ.டி.முன்னாள் மாணவர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர் முரளிதரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் முதலில் 5 ஐஐடிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஐ.ஐ.டி.க்கள் ஆரம்பிக்கபட்டு 60 ஆண்டிற்கு மேல் கடந்துள்ளது. 1959 ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்பட்ட முயற்சியால் ஐ.ஐ.டி.ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது இந்தியாவில் 23 ஐ.ஐ.டி.க்கள் உள்ளன.
ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டில் 2008ம் ஆண்டு வரையில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மட்டும் தான் இருந்தது. 2008 ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் 37,500 மாணவர்கள் படிக்கின்றனர்.
தற்பொழுது ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களில் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் குறைவாகவே இருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்கள் விபரத்தினை பெற்றேன். அதில் கடந்த 4 ஆண்டுகளில் 40 சதவீதம் மாணவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் இருந்து தான் படிக்கின்றனர். இதனை தான் தவறு என கூறவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் படித்தால் தான் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடைய முடியும். இந்தியாவில் ஐ.ஐ.டி.க்கு ஆண்டிற்கு 8 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கான தொகை மக்களின் வரிப்பணம் தான். எனவே இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி.களில் அந்த மாநிலங்களிலும் படித்த மாணவர்களுக்கு 50 இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதம் இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பிக் கொள்ளலாம். எல்லா மாநிலங்களும் உயர்ந்தால் தான் இந்தியா ஒட்டு மொத்த வளர்ச்சி அடையும்.

தமிழகத்தில் இருந்து சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளிலும் 18 சதவீதம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். ஆந்திரா மாணவர்கள் அதிகளவில் படிப்பதற்கு காரணம் அவர்கள் இளங்கலை பட்டத்தினை முடித்தப் பின்னர் ஐஐடியில் சேர்வதற்கு தனியாக பயிற்சி பெறுகின்றனர். இது தவறு ஒன்றும் இல்லை.
அனைத்து ஐஐடியில் மாணவர் சேர்க்கை குறித்த தகவலை அளிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டால் அதனைத அளிப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அளிப்பதற்கு மறுத்து வருகிறது. எனவே இது குறித்து நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்து அளிக்க வேண்டும் என கேட்க உள்ளேன்.
ஐ.ஐ.டி.களில் அந்த மாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என சமூகநீதியிக்காக போராடி வரும் திமுக எம்.பி.களும், சமூக நீதியினை காத்த வீராங்கனை என்ற பட்டத்தினை பெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசினை நடத்தி வரும் முதலமைச்சரும் வலியுறுத்த வேண்டும்.
அதேபோல் அசாமில் ஐஐடி வேண்டும் என போராடி பெற்றனர்.ஆனால் அந்த ஐஐடியில் அம்மாநில மாணவர்கள் குறைவான அளவில் தான் படித்து வருகின்றனர். எனவே அனைத்து ஐஐடியிலும் அந்த மாநில மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.