ETV Bharat / state

'பிரதமர் பேச்சு புரியலனா சேனல மாத்திக்கோங்க' - அமைச்சர் பாண்டியராஜன் - பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா

சென்னை: 'பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ உரையில் சப்டைட்டில் புரியவில்லை என்றால் சேனலை மாற்றி வேறு நல்ல நிகழ்ச்சி பாருங்க' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Minister Pandiyarajan
Minister Pandiyarajan
author img

By

Published : Dec 29, 2019, 11:21 PM IST

வரும் ஜனவரி 16ஆம் தேதி ’பரிஷ்கா பி சார்ச்சா’ எVdனும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். உரையாடலில் கலந்துகொள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

16ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாட்டில் குழப்பமும் சர்ச்சையும் கிளம்பியது. இது குறித்து விளக்கமளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டியதில்லை எனவும், உரையாடலை வீட்டிலிருந்தே பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தென்னக பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் "தேர்வு பயத்தை போக்கும்வகையில் பிரதமர் மோடி வரும் 16ஆம் தேதி மாணவர்களுடன் நேரலையில் பேசவுள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது

மாணவர்கள் அதனை வீட்டிலிருந்தே கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கேட்கலாம். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்திவுள்ளார். பிரதமர் மோடி நேரலையில் இந்தியில் பேசினால், சப்டைட்டில் கொடுக்கப்படும் என நினைக்கிறேன். சப்டைட்டில் புரியவில்லை என்றால் சேனலை மாற்றி வேறு நல்ல நிகழ்ச்சி பாருங்கள்" என்றார்.

இதையும் படிங்க: ’மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Intro:பிரதமர் இந்தியில் பேசினால்
வேறு சேனலை
திருப்பிக் கொண்டு போய்விடலாம்

Body:பிரதமர் இந்தியில் பேசினால்
வேறு சேனலை
திருப்பிக் கொண்டு போய்விடலாம்
சென்னை,
மாணவரின் தேர்வு பயத்தை போக்குவது குறித்து பிரதமர் இந்தியில் பேசினால் வேறு சேனல் திருப்பிக் கொண்டு போய்விடலாம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரு வாரமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் தென்னக கலை பண்பாட்டு மையத்தின் கலைஞர்களுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தென்னிந்திய கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் மார்கழி மாதத்தில் நான்கு கலைகளுடன் கூடிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. யூனியன் பிரதேசம் உட்பட 8 மாநிலங்களுக்கு ஒரு கலை வெளிப்பாடாக அமைந்தது. தென்னிந்திய அளவில் கலைகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி 16 ஆம் தேதி மாணவர்களிடையே பேசவுள்ளார். மாணவர்கள் அதனை வீட்டில் இருந்தால் கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் டிவி இல்லாதவர்கள் பள்ளியில் வந்தும் கேட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தெளிவுபடுத்தி உள்ளார். சுற்றறிக்கை மாணவர்களுக்கு தரப்படவில்லை, பள்ளிகளுக்கு தரப்பட்டுள்ளத. பிரதமரின் உரை மாணவர்கள் சென்றடைய தேவையானவற்றை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்து படித்தால் அதில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அவரே நினைப்பார். ஒரு காலத்தில் கருணாநிதி நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்தார். தற்போது பிரதமர் அதனை செய்கிறார் அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. அதில் அரசியலோ, தனிநபர் துதியோ கிடையாது.
அந்த புத்தகம் குறித்து தேவையற்றவற்றை கூறி ஸ்டாலின் விளம்பரத்தைத் தேடித் தந்துள்ளார்.

மாணவரின் தேர்வு பயம் போக்கும் புத்தகத்தில் பல்வேறு நல்ல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இது நல்ல முயற்சி, மாணவர்களுக்கு விழிப்புணர்வை தரும் என நம்புகிறேன்.

கோலம் போட்டதற்காக யாரையும் கைது செய்யவில்லை. கோலத்தில் அவர்கள் கூறிய கருத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கலாம். கோலம் சொன்ன கருத்துக்கள் அலங்கோலமாக, வன்முறையை தூண்டும் வகையில் அமைந்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே காவல்துறையினர் கைது செய்திருக்கலாம்.

பிரதமர் மோடி இந்தியில் பேசினால் பேசாமல் நீங்கள் வேறு சேனலை திருப்பிக் கொண்டு போய் விடலாம். தமிழில் மாணவர்கள் தேர்வு பயம் நீக்குவது குறித்து புத்தகமே போடப்பட்டுள்ளது. நேரில் பார்த்துப் பேசுவது நல்ல விஷயம். தமிழில் துணைத்தலைப்புகள் போடுவார்கள் என நினைக்கிறேன். அதனை விருப்பப்பட்டால் பார்க்கலாம். இல்லாவிட்டால் வேறு சேனலைப் பார்த்துக் கொள்ளலாம். கட்டாயம் யாரும் பார்க்க வேண்டும் என கூறவில்லை என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.