ETV Bharat / state

கோயில் வாசலில் சிலைகள் - முதியவர் வாக்குமூலம் - கோயில் சிலைகள்

கோயில் வாசலில் மூன்று உலோக சிலைகள் கிடந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்கள் பிரிந்துசென்றதால் ஜோசியரின் அறிவுரைப்படி சிலைகளை வீசிச் சென்றதாக முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ட்ஃபச்
டச்
author img

By

Published : Sep 29, 2021, 4:01 PM IST

சென்னை: ஜாம்பஜார் ஆறுமுகப்பா தெருவில் உள்ள முத்துமாரி அம்மன் கோயில் வாசலில் நேற்று பகல் மூன்று உலோக சிலைகள் கிடந்தன. இதனைக் கண்ட செந்தில்குமார் உடனடியாக ஜாம்பஜார் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் சிலைகளை மீட்டு விசாரித்தனர்.

குறிப்பாக சிலைகளை வீசிச் சென்ற நபர் யார் என அருகிலிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வுசெய்தனர். அதில் முதியவர் ஒருவர் உலோக சிலைகளை வீசிச் செல்வது பதிவாகியிருந்தது. இதனையடுத்து செய்யப்பட்ட கூடுதல் விசாரணையில் சிலைகளை வீசியது துளசி என்ற முதியவர் என்பது தெரியவந்தது.

மேலும், துளசி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பூக்கடை தேவராஜ முதலித் தெருவில் பித்தளையால் ஆன மூன்று உலோக சிலைகளை வாங்கி அதை வைத்து வீட்டில் வழிபாடு செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, அவர் அளித்த வாக்குமூலத்தில், "சிலைகளை வாங்கிவந்த நாளிலிருந்தே குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினைகள் நடந்தன. குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது என்னைவிட்டுப் பிரிந்தும் சென்றிருக்கிறார்கள். நான்கு மகள்கள், ஒரு மகன் இருந்தும் யாரும் என்னைக் கவனிக்கவில்லை.

இதனால் பல ஆண்டுகளாக மன உளைச்சலிலிருந்து கடைசியாக ஜோசியர் ஒருவரைச் சந்தித்து இது பற்றி கேட்டபோது, சாமி சிலைகளை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. அதனை உடனடியாக அப்புறப்படுத்தினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் எனக் கூறியதால் சிலைகளை கோயில் வாசலில் வைத்துச் சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.