ETV Bharat / state

சிலை கடத்தல் வழக்கில் டிஜிபிக்கு அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு - சிலை கடத்தல் வழக்கு

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் கேஸ் டைரி மாயமானது தொடர்பான வழக்கில், டிஜிபி அறிக்கை அளிக்க மேலும் நான்கு வார கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

court
court
author img

By

Published : Jun 2, 2020, 12:36 AM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில்,
தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத் துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களைக் காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டுவிட்டன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மிகமுக்கிய நபர்கள் தொடர்புள்ள சிலை கடத்தல் வழக்குகளை இப்படித்தான் போலீசார் முடித்து வைப்பதாகவும், உயர்அதிகாரிகளுடன், விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.

எனவே இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழக டிஜிபிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கில் தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் யானை ராஜேந்திரன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி இதில் தொடர்புடைய அதிகாரிகள் பெயர் பட்டியலையும் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கரோனா காரணமாக அதிகாரிகள் எல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.