ETV Bharat / state

சென்னை வந்தடைந்த நடராஜர் சிலை - பொன் மாணிக்கவேல் உற்சாகம் - நடராஜர் சிலை

சென்னை: ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது.

nadarajar statue
author img

By

Published : Sep 13, 2019, 1:02 PM IST

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகர முடையார் கோயிலிலிருந்து 37ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய அடிலைட் (Adelaide) அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. 1982ஆம் ஆண்டு சிலை காணாமல் போன சமயத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆய்வறிக்கைகளை வைத்து ஆஸ்திரேலியாவில் இருப்பது தமிழ்நாடு கோயில் சிலை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்பின்னர் முதல் தகவல் அறிக்கையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திடம் கொடுத்துள்ளனர். சிலையை மீட்க ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் துணைக் கமிஷனர் கார்த்திகேயன் மூலம், அருங்காட்சியகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து நடராஜர் சிலை டெல்லி கொண்டுவரப்பட்டு இன்று சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், நடராஜர் சிலை மீட்கப்பட்டதற்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். அவர்களால் தான் இந்த குழுவே உருவாக்கப்பட்டது. இந்தச் சிலை மீட்கப்பட்ட பெருமை உயர் நீதிமன்றம், வழக்கறிஞர்களையே சேரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், 'சிலைகள் காட்சி பொருள்கள் அல்ல. வெளிநாடுகளில் இருந்து சிலைகள் கொண்டுவரப்படவேண்டும் என பல கடிதங்கள் அப்போதைய டிஜிபி ராஜேந்திரனுக்கு எழுதியும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

சென்னை வந்தடைந்த நடராஜர் சிலை

இன்னும் 20 சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வர வேண்டும். அரசுத்தரப்பில் ஒத்துழைப்பு வழங்கினால் நாங்கள் அனைத்து சிலைகளையும் மீட்போம். சிலை மீட்கப்பட்டது தொடர்பாக அரசுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். சிலைகள் மீட்கப்படும் செலவுகள் ஏதும் அரசிடம் இருந்து வரவில்லை. பல முறை உள்துறை செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் ரயிலில் பயணித்து வருகிறோம். எங்களுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்' என்றார்.

Intro:Body:ஐம்பொன் நடராஜர் சிலை சென்னையை வந்தடைந்தது - ரயில் நிலையம் கோயிலாக மாறிய காட்சி

37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட30 கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையை மீட்ட பொன்மானிக்கவேல் தலைமையிலான சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்று காலை டில்லியில் இருந்த ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கல்லிடக்குரச்சி குலசேகர முடையார் கோவிலில் இருந்து 1982 ஆம் ஆண்டு நடராஜர் உட்பட 5 ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அடிலைட் (Adelaide) பகுதியில் அருங்காட்சியகத்தில் சிலை இருப்பது தெரியவந்தது. சிலை காணாமல் போன சமயத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆய்வாளர்களை வைத்து அங்கு இருப்பது தமிழக கோவில் சிலை என்று உறுதிப்படுத்தி சிலையை மீட்டு இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்ட்ரல் ரயில்நிலத்தில் மேல தாளங்கள் முழங்க சிலையை பக்தர்கள் வரவேற்றனர். ரயில்நிலையல் வாயிலில் சிலை திறக்கப்பட்டு பூசை செயப்பட்டது. சிறுது நீரம் ரயில்நிலையம் கோயிலாக மரியா கட்சியை அங்கு உணரமுடிந்தது. ரயில் பயணிகள் வரிசையில் நின்று நடராஜரை தரிசிக்க தொடங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்மாணிக்கவேல் பேசுகையில், இன்று சிலை மீட்கப்பட்டதற்கு முதலில் தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிதிமன்றத்திற்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.அவர்களால் தான் இந்த குழுவே உருவாக்கப்பட்டது. எனவே இன்று இந்த சிலை மீட்கப்பட்ட பெருமை உயர்நிதிமன்றதிற்கும், வழக்கறிஞர்களுக்கும் சேரும் என தெரிவித்தார். இரண்டாவதாக உலகம் முழுவதும் உள்ள ஆன்மிகவாதிகளை தொடர்ந்து செய்திகள் 24 மணி நேரமும் சிலைகள் பற்றி தெரிவித்து இணைந்த ஊடகங்களுக்கும் சேரும் என கூறினார்.

இந்தியா தொல்லியல் துறை, இந்தியா வெளியுறவு துறை, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா வெளியுறவு துறை அமைச்சகம் போன்றவர்கள் இந்த சிலையை மீட்க மிகவும் உதவியாக இருந்தனர்.

இங்கு உள்ள சிலைகள் காட்சி பொருள்கள் அல்ல. வெளிநாடுகளில் இருந்து சிலைகள் கொண்டுவரப்படவேண்டும் என பல கடிதங்கள் அப்போதைய டிஜிபி ராஜேந்திரனுக்கு எழுதியும் பதில் ஏதும் கிடைக்க வில்லை. அதுவே சிலைகள் மீட்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இடையில் சில அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு தகவலை சரியாக பரிமாற்றவில்லை என்று நங்கள் எண்ணுகிறோம். இன்னும் 20 சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வர வேண்டும். கணக்கில அதிக அளவில் இருப்பதால் அதை சரியாக சொல்ல முடியாது. ஆனால் ஒத்துழைப்பு வழிங்கினால் நங்கள் அணைத்து சிலைகளையும் மீட்போம். சிலை மீட்கப்பட்டது தொடர்பாக அரசுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம். அனைத்தும் சரியாக செய்து வருகிறோம். மீட்கப்பட்ட சிலைகள் உயர்நிதிமன்றத்தில் காட்டியே பிறகு கோயிலில் வைக்கப்படும்.

சிலைகள் மீட்கப்படும் செலவுகள் ஏதும் அரசிடம் இருந்து வரவில்லை. பல முறை உள்துறை செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் ரயிலில் பயணித்து வருகிறோம். எங்களுக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் பொய் கூறி வருகிறார்கள் என தெரிவித்தார். மேலும் இன்னும் 2 மாதங்களில் என் பணி நிறைவு பெறுவதால் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் செயல்பட்டு முடிந்தவரை சிலைகளை மீட்போம் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.