ETV Bharat / state

கோவையில் 250 வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் தடை - Icord bans power connection to 250 houses in Chinniyampalayam,

சென்னை: கோவை சின்னயம்பாளையம் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் அங்குள்ள 250 வீடுகளின் மின்சார இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

hc
hc
author img

By

Published : Jan 24, 2020, 2:35 PM IST

கோவை மாவட்டம் சின்னயம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 250 வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 250 வீடுகளின் மின் விநியோகத்தை துண்டிக்க கடந்த விசாரணையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிரித்து சின்னயம்பாளையத்தில் உள்ள செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து மனுதாரர் பழனிசாமி, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் 106 காலிப்பணியிடங்கள்!

Intro:Body:கோயம்புத்தூர் மாவட்டம் சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகள் தன்னுடைய நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும், அவர்களை அந்த நிலத்தில் அகற்ற கோரி அந்த பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 250 வீடுகளின் மின் விநியோகத்தை துண்டிக்க கடந்த விசாரிணையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிரித்து சின்னயம்பாளையத்தில் உள்ள செல்வராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சின்னயம்பாளையத்தில் உள்ள 250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு குறித்து பழனிசாமி, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.