சென்னை: திருவல்லிக்கேணியில் தாமரை இலவச போட்டித்தேர்வு ஆலோசனை மையம் மூலமாக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "துணைவேந்தர் நியமனத்தை அரசுதான் நியமனம் செய்யும் என்ற மசோதாவை திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கொண்டு வந்துள்ளது. ஆளுநரை பழிவாங்கும் நோக்கத்தோடு உயர் கல்வித் துறையில் அரசியலை புகுத்தி மாணவர்களுடைய நலனை கெடுக்க வேண்டும் என திமுக நினைக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து நன்றாக மக்கள் பணி செய்யக்கூடிய யாராக இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டால் வரவேற்போம். ஹெச்.ராஜா ஒரு நல்ல மனிதர். மக்கள் பணியில் நீண்ட நாட்களாக உள்ளார். ஆளுநராக தேர்தெடுக்கப்பட்டால் வரவேற்பேன்.
இதையும் படிங்க:பாஜகவின் பிரதான எதிரியான முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த நயினார் நாகேந்திரன்!