ETV Bharat / state

அண்ணாமலையையும் எதிர்ப்பேன் - நடிகை காயத்ரி ரகுராம் - மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர்

பாஜகவிற்கு நான் எதிரானவள் என அண்ணாமலை கூறினால், அவரையும் நான் எதிர்ப்பேன் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Etv Bharatஅண்ணாமலையையும் எதிர்ப்பேன் - நடிகை காயத்ரி ரகுராம்

author img

By

Published : Nov 22, 2022, 7:38 PM IST

சென்னை: பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகக்கூறி பாஜகவில் இருந்து ஆறு மாத காலங்கள் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "5 பைசா ஆதாயம் இல்லமல் கடன் வாங்கி மக்களுக்கு உதவி செய்தேன். 8 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்து உள்ளேன். உண்மையைப் பேசியதால் என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளர்கள். நான் பாஜகவிற்கு களங்கம் விளைவித்ததாகக் கூறுவது தவறு. எனது கருத்துகளை கேட்காமலேயே கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். என்னிடம் எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. என் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.

திட்டமிட்டு பதவியில் இருந்து நீக்கினர்: கலாசாரப் பிரிவு தலைவராக இருந்தபோதே என்னை திட்டமிட்டு அப்பதவிலிருந்து விலக்கினர். பெப்சி சிவா மீது நான் ஏற்கெனவே புகார் அளித்தபோது, என்னை தான் பதவியில் இருந்து நீக்கினர். பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகி செல்வகுமார் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி கருத்துகளைப் பதிவிட்டதால், நான் எனது கருத்தைப் பதிவிட்டேன். என்னை அடித்தால் நான் திருப்பி அடிக்கும் கேரக்டர். நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக, யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால், அவரையும் நான் எதிர்ப்பேன்.

காசி தமிழ்ச்சங்கத்தில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் அளித்தது. அதற்கான ஆலோசனைக் கூட்டங்களில் என்னை புறக்கணித்தனர். தற்போது சூர்யா சிவா பெண் நிர்வாகியிடம் பேசியது சைதை சாதிக் பேசியதைவிட மோசமானது.

சூர்யா சிவாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சூரியா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் கண்டிப்பாக பாஜகவில் தான் தொடர்ந்து இருப்பேன். யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என் மீது குற்றம்இல்லை என்பது தான் உண்மை.

பாலியல் குற்றம் எல்லா கட்சியிலும் நடக்கிறது. எல்லா குற்றத்திற்கும் எதிராக செயல்பட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டிற்கு காரணமாக சொந்த மகன் இருந்தால் கூட நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சியில் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். முட்டி மோதி தான் என்னுடைய இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன்" எனக் கூறினார்.

அண்ணாமலையையும் எதிர்ப்பேன் - நடிகை காயத்ரி ரகுராம்

இதையும் படிங்க:நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து தற்காலிக நீக்கம்; சூர்யா சிவாவுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.