சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாயார் செல்வி, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
மனு அளித்த பின்னர் நமக்கு பேட்டியளித்த பள்ளி மாணவியின் தாயார் செல்வி, "குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளோம். ஏற்கெனவே இந்த ஆணையத்தின் நிர்வாகத்தில் இருந்து நேரடியாக வந்து அனைத்து இடங்களையும் பார்த்துள்ளனர்.
இதில் கொலைக்கான வாய்ப்புகள் தான் அதிகம். தற்கொலைக்கு ஒரு விழுக்காடு கூட வாய்பே இல்லை. அரசு மற்றும் அரசியல் கட்சிகளிடம் என் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை மனு கொடுத்துக்கொண்டே தான் இருப்பேன்'' எனக் கூறினார்.
மேலும் ’’இது தற்கொலை என்றால், என் மகள் மாடியில் இருந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை காண்பித்தால் அனைத்து ரகசியங்களும் வெளியில் வரும். ஆனால் அதை மறைப்பதற்கான காரணம் என்ன? அதனால் தான் இது கொலை என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து தலைவர்களிடத்தும் மனு அளித்துள்ளோம். அனைவரும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்