ETV Bharat / state

‘கடந்த கால குடியரசுத் தலைவர்கள் போல் நான் இருக்க மாட்டேன்’ - யஸ்வந்த் சின்ஹா - யஸ்வந்த் சின்ஹா பேச்சு

கடந்த காலங்களில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போலவும், பிரதமர் அலுவலகத்தின் சிறைவாசி போலவும் செயல்பட்டார்கள். தான் அவ்வாறு செயல்பட மாட்டேன் என குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

மத்திய அரசை விமர்சித்த யஸ்வந்த் சின்ஹா
மத்திய அரசை விமர்சித்த யஸ்வந்த் சின்ஹா
author img

By

Published : Jun 30, 2022, 10:32 PM IST

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தனக்கு தேர்தலில் ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த காலங்களில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள் ஒரு ரப்பர் ஸ்டாம்பு போலவும், பிரதமர் அலுவலகத்தின் சிறைவாசி போலவும் செயல்பட்டார்கள்.

நான் அவ்வாறு செயல்பட மாட்டேன். குடியரசுத் தலைவர் சார்பு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெற்றிக்காக பாடுபடுவேன். குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் ராஷ்டிரபதி பவன் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவேன். மகாராஷ்டிராவில் ஆளும் அரசை தவித்ததன் மூலம் கடத்தல் அரசியலை பாஜக அரசு செய்துவருகிறது.

மத்திய அரசை விமர்சித்த யஸ்வந்த் சின்ஹா

மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பணத்தால் கவிழ்க்கும் அரசாகவும் பாஜக அரசு செயல்படுக்கிறது. மீண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை ஆளுநர்கள் மூலம் அவமானப்படுத்தக்கூடிய பணியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் பலமான ஆட்சி இருப்பதால் மத்திய அரசு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ மத்திய அரசுடைய ஏஜென்சியாக செயல்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இன்டர்நெட் வழங்குவதை நோக்கி அரசு செயல்படுகிறது:பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.