ETV Bharat / state

அண்ணாமலை மீது வருகின்ற 8ஆம் தேதி கிரிமினல் வழக்குத்தொடர்வேன்… டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பு பேட்டி!

அவதூறு நோட்டீஸ்-க்கு அண்ணாமலை இதுவரை பதில் அளிக்காததால் அவர் மீது வருகின்ற எட்டாம் தேதி கிரிமினல் வழக்குத்தொடர்வேன் என எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 2, 2023, 5:01 PM IST

Updated : May 2, 2023, 10:13 PM IST

அண்ணாமலை மீது வருகின்ற 8ஆம் தேதி கிரிமினல் வழக்குத்தொடர்வேன்… டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பு பேட்டி!

சென்னை: பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன் திமுகவினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டார். மேலும் சொத்து விவரம் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் அவதூறு பரப்பும் வகையில் அண்ணாமலை வீடியோ வெளியிட்டதற்காக 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்குப் பகுதி திமுக சார்பில் நடைபெற்ற திமுக செயல்குழு கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலத் தலைவர் வே.கருணாநிதி உட்படப் பலர் பங்கேற்றனர்

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், ''பாஜகவின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு குறித்த செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை. எனது வழக்கறிஞருக்கும் வரவில்லை.

இதையும் படிங்க: Chennai Rains: சென்னையில் கொட்டித்தீர்த்த மழை.. அண்ணா சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதி!

நோட்டீஸிற்குப் பதில் அளிக்க 48 மணி நேரம் அவகாசம் கொடுத்தேன். ஒரு வாரமாகியும் பதில் வராத நிலையில் வரும் எட்டாம் தேதி அவர் மீது வழக்குத் தொடரப்போகிறேன். முதலில் கிரிமினல் வழக்குத் தொடர்வேன். அதற்குப் பிறகு சட்டப்பூர்வமாக சிவில் வழக்குத் தொடர்வேன்.

21 கம்பெனிகள் எனக்குச் சொந்தமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறிய 21 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்களில் தான் நான் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெகு காலமாக நான் பங்குதாரராக உள்ளேன்.

எனக்குச் சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும்போதே சொத்துக் கணக்குகள் அனைத்தையும் கொடுத்துள்ளேன். அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது பொதுமக்களுக்குத் தெரியும்.

எனக்குச் சொந்தமானதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறும் பெயரில் கம்பெனிகளே இல்லை என்பது இணையதளங்களில் பார்த்தால் தெரியும். அண்ணாமலை ஒரு வன்ம நோக்கத்தோடு என் மீது அவதூறு பரப்பியுள்ளார். அதற்காக நான் வழக்குத்தொடராமல் இருக்க முடியாது'' என்றார்.

இதையும் படிங்க: "ஆடியோ மூலம் மட்டமான அரசியல்" - அமைச்சர் பிடிஆர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

Last Updated : May 2, 2023, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.