ETV Bharat / state

‘நான் அதிகாரம் மிக்க நபர் இல்லை, எனக்கு அதிக வேலை இருக்காது’ - ஆளுநர் ஆர்.என்.ரவி - chennai news

ஆளுநர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை பொதுமக்கள் மத்தியில் உள்ளது. நான் அதிகாரம் மிக்க நபர் இல்லை தமக்கு அதிக வேலை எதுவுமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 22, 2023, 9:47 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் எண்ணித் துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியாக புது தொழில் முனைவோர் மற்றும் பெரு நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஜூலை22) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "எப்போதெல்லாம் இது போன்ற சந்திப்புகளில் கலந்து கொள்கிறேனோ அப்போதெல்லாம் அதிகம் படிக்கிறேன், கற்றுக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளது. செல்வம், வளங்கள் இல்லை என்றால் யாரும் வெல்ல முடியாது தேவை என்பது உள்ளது. ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து பள்ளிகளை, மருத்துவமனைகளை அதிகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். பிரச்னைகளை அதிகமாகி வருகிறது, அதை துரத்தி வருகிறோம்.

வாழ்வில் புரட்சிகாரமான மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு தான் உள்ளது. உங்களை நீங்கள் தான் மாற்றி கொள்ள முடியும், அரசு மாற்ற முடியாது. 140 ஆண்டுகளாக இந்த நாடு அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. மக்கள் சக்தியால் தான் உருவானது. 9 ஆண்டுகள் முன் வரை புது தொழில் முனைவோர் குறைவாக தான் இருந்தனர். இன்று 3ஆம் பெரிய புது தொழில் முனைவோர் இருக்கும் நகரமாக இருக்கிறது.

இந்தியா இன்று வேகமாக பொருளாதார அளவில் வளர்ந்து வரும் நாடு, மக்கள் மீதுள்ள நம்பிக்கை முக்கியமானதாக இருக்கிறது. கனவு மிக முக்கியம் தோல்வி ஏற்படும் அனைவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல்வி என்பது பாடம் தான். மேலும், இந்தியாவில் பல திறமைசாலிகள் இருப்பதாகவும், இந்தியாவின் திறமைகளால் தான் வெளிநாடுகள் வளர்ச்சி அடைவதாக ஆளுநர் கூறினார்.

நிகழ்ச்சி பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது வெளியில் எச்சில் துப்பும் பழக்கம் உள்ளது. அதனை பதவியில் இருக்கும் நீங்கள் தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யலாமே? என்ற கேள்விக்கு,

"நீங்கள் சொல்வதை செய்யும் அளவுக்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் எப்போதும் பிஸியாக இருப்பதாக பலர் சொல்வார்கள் அதைக் கேட்டால் எனக்கு சிரிப்பு தான் வரும்" என்றும் ஒரு கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளித்தார். சுய ஒழுக்கம் என்பது மிக முக்கியம், உடல் தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு உதவும் கருவி.?

"காலையில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் யோகாசனம் மற்றும் பிராணாயாமம் செய்வதால் தான் என் உடல் கட்டுக்கோப்பாக உள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது 140 கோடி மக்களுக்கும் அரசால் அனைத்தையும் செய்து விட முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள், காரணம்" என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேள்விக்கு தமிழக ஆளுநர் ரவி பதில் அளித்தார்.

இதையும் படிங்க: Chennai: குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாம்: ஆகஸ்ட் 7 முதல் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.