ETV Bharat / state

ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன்... அர்ஜூனமூர்த்தி - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்தின் ஆசிர்வாதத்துடன் தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன் - அர்ஜுனமூர்த்தி

author img

By

Published : Aug 22, 2022, 5:04 PM IST

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநிலத்தலைவராக இருந்து பின்னர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, ரஜினி கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்றக்கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கியவர் அர்ஜூன மூர்த்தி. இவர் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன மூர்த்தி, "இன்று மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜக சிறப்பான அந்தஸ்தைப்பெற நான் உழைப்பேன். பதவி, அந்தஸ்துக்காக பாஜகவில் சேரவில்லை. ஆன்மிக அரசியல் தொடர்பான ரஜினியுடன் எனக்கு ஒத்த அரசியல் கருத்து இருந்ததால் இணைந்தேன்.

ரஜினியின் ஆசிர்வாதத்துடன்தான் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளேன். விவேகம், வீரியம் மிக்கவராக அண்ணாமலை இருக்கிறார். ரஜினியிடம் தெளிவான சிந்தனை, தொலை நோக்குப்பார்வை இருந்தது. ரஜினி ஒரு கருத்தைக் கூற நினைத்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுவார்.

ரஜினி உட்பட அனைத்து இந்திய குடிமகனுக்கும் அரசியல் என்பது அடிப்படை உரிமை. அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை... சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.