சென்னை : திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராஜா(49). ஆட்டோ ஓட்டுனரான ராஜா பாரதி சாலை விக்டோரியா மருத்துவமனை அருகே சொந்தமாக டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் தனது டிபன் கடைக்கு அருகே ராஜா நின்று கொண்டிருந்த போது திடீரென முககவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் ராஜாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த ராஜாவை கண்ட அவரது மனைவி மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ராஜா மீது கொலை,கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை...