ETV Bharat / state

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

சென்னை: ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

husband-arrested
husband-arrested
author img

By

Published : Dec 23, 2019, 12:42 PM IST

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்(37). இவரது மனைவி காமாட்சி(28). இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். காமாட்சிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக கணவர் குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து, கணவன், குழந்தைகளை விட்டுப் பிரிந்து காமாட்சி பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காமாட்சி தனது மூன்று பிள்ளைகளை பார்ப்பதற்காக குமரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மது போதையிலிருந்த குமரன் பிள்ளைகளை பார்க்க வரக்கூடாது என காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்ய முயற்சி கணவர்

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமரன், கொலை செய்யும் நோக்கத்தில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை கொண்டு காமாட்சியை கழுத்து, வயிறு, தொடை என சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காமாட்சியின் உடலிருந்து ரத்தம் வெளியேறி வலியில் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குமரனை கைது செய்தனர். கணவனே, மனைவியை கொலை செய்ய முயற்சித்தது ஆவடியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோவை விமான நிலையத்தில் 6.99 கிலோ தங்கம் பறிமுதல்!

Intro:ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது.Body:ஆவடி அருகே மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் குமரன்/37. இவரது மனைவி காமாட்சி/28.இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர். இதற்கிடையில் காமாட்சிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக குமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு முன் கணவன் குழந்தைகளை விட்டுப் பிரிந்து ஆவடி அருகே வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காமாட்சி தனது மூன்று பிள்ளைகளை பார்ப்பதற்காக முகப்பேரில் உள்ள குமரன் வீட்டிற்கு சென்றுள்ளார்.இது குமரனுக்கு தெரியவரவே இன்று மது போதையில் வீராபுரத்தில் உள்ள காமாட்சி வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கே தன் பிள்ளைகளை பார்ப்பதற்கு நீ வரக்கூடாது என கூறி காமாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குமரன் கொலை செய்யும் நோக்கத்தில் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை கொண்டு காமாட்சியை கழுத்து,வயிறு,தொடை என சரமாரியாக குத்தினார். இதில் காமாட்சியின் உடலிருந்து ரத்தம் வெளியேறி வலியில் துடித்தார்.இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் குமரனிடம் இருந்து காமாட்சியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் இதுகுறித்து டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குமாரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.பின்னர் குமரனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவனே மனைவியை கொலை செய்ய முயற்சித்தது பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.