ETV Bharat / state

தமிழ்நாடு அரசை கண்டித்து ஐடி, ஐடிஇஎஸ் சங்கம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஐடி, ஐடிஇஎஸ் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

போராட்டம்
author img

By

Published : May 20, 2019, 8:39 AM IST

இது தொடர்பாக சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஊழியர்கள், இ-சேவை மையங்களில் அலட்சியமாக வேலை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் மே 17ஆம் தேதி எச்சரித்திருந்தார். இதற்கு ஊழியர்கள் தரப்பில், ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கவில்லை என்றும், சேவை மையத்தில் தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனைதொடர்ந்து இ-சேவை, ஆதார் சேவை மைய ஊழியர்களை ஆதரித்தும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் ஐடி, ஐடிஇஸ் தொழிலாளர்கள் சங்கம் (Union of IT & ITES Employees) தலைமையில் தமிழ்நாடு முழுவதும் மே 31ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி மற்றும் ஐடிஇஸ் தொழிலார்கள்  சங்கம் (Union of IT & ITES Employees) தலைமையில் தமிழகம் முழுவதும் இ சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள்  வருகின்ற மே 31 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு கேபில் டிவி நிறுவனம் ஊழியர்கள் இ சேவை மையங்களில் அலட்சியமாக வேலை செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் கடந்த மே 17 ஆம் தேதி எச்சரித்திருந்தார்.

இதற்கு ஊழியர்கள் தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் வழங்காததும், சேவை மையத்தால் தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் பெண்களுக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் உள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இ சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களை ஆதரித்தும், அரசை கண்டித்தும் ஐடி மற்றும் ஐடிஇஸ் தொழிலார்கள்  சங்கம் (Union of IT & ITES Employees) தலைமையில் தமிழகம் முழுவதும் மே 31 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்துள்ளது.  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.