சென்னையை அடுத்த பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த 16 மாதங்களாக பயிற்சி பெற்றுவந்த 151 ஆண்கள் மற்றும் 35 பெண் ராணுவ அதிகாரிகள் நேற்று (அக்.30) முதல் பணியை தொடங்கினர். முன்னதாக பயிற்சி நிறைவு நாளை முன்னிட்டு ராணுவ அணிவிப்பு நடந்தது. இந்த அணி வகுப்பை ராயல் பூடான் ராணுவ தலைமை செயல்பாட்டு அதிகாரி படூ ஷேரிங் ஏற்றுக்கொண்டார்.
அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த படூ ஷேரிங் சிறப்பாக செயல்பட்ட கவுரவ் சக்லானிக்கு தங்கப் பதக்கத்தையும், பவித்ராவுக்கு வெள்ளிப் பதக்கத்தையும், மல்லிகார்ஜுன் நேசராகிக்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள், தங்கள் பதவிகள் மற்றும் படைப்பிரிவு அணிகலன்களை அணிந்துகொண்டு நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக மரியாதையுடன் சேவை செய்வதாக உறுதியளித்தனர். நாட்டிற்கும் இந்திய அரசியலமைப்பிற்கும் விசுவாசமாக இருப்போம் என்றும் சத்தியம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரிகளாக வெளியே வந்த வீரர்களை தாய் தந்தையர் மற்றும் குடும்ப உறவினர்கள் ஆரத் தழுவி வரவேற்று மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த பயிற்சியில் நட்பு நாடுகளைச் சேர்ந்த 8 ஆண் மற்றும் 28 பெண் அதிகாரிகளும் இங்கு பயிற்சியை நிறைவு செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை வதந்திகளை பரப்புகிறார்... காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்... தமிழ்நாடு காவல்துறை...