ETV Bharat / state

பொது சிவில் சட்டம் என்பது தேன் கூட்டில் கையை வைப்பது போன்றது - ஜவாஹிருல்லா எம்எல்ஏ - Jawahirullah MLA from Papanasam Constituency

பொது சிவில் சட்டம் என்பது தேன் கூட்டில் கையை வைப்பது போன்றது. இது மோடியின் ஆட்சியை அகற்ற வழிவகை செய்யும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்

author img

By

Published : Jul 6, 2023, 9:34 AM IST

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்

சென்னை: பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி அரசு பயணமாக அமெரிக்கா சென்று திரும்பினார். அதன் பின்னணி தற்போது தெரிய வந்து உள்ளது என கூறினார்.

சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமெரிக்கா ராணுவ கப்பல் பழுது பார்க்கும் தளம் அமைக்க சென்னை லார்சன் அன் டியூப்ரோ நிறுவனம் மற்றும் அமெரிக்க கப்பல் படை இடையே ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார். அதே போன்று இந்தியா எப்போதும் அமெரிக்கா, ரஷ்யா என அணி சாரா கொள்கையுடன் தனித்த நடுநிலைபாட்டைக் கொண்டிருந்த நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் தமிழ்நாட்டு துறைமுகத்திற்கு அமெரிக்க கப்பல்கள் வந்து செல்லக் கூடிய மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை, சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பது என்பது அமைதி சார்ந்த தமிழ்நாட்டை ராணுவ மயமாக்குவது போன்ற பயங்கரமான செயல் என்பதால் தமிழ்நாடு அரசு இதனை வலுவாக எதிர்க்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்க: பொது சிவில் சட்டம்; அதிமுகவின் நிலைப்பாடு; 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?

மேலும் தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியாவில் பல்வேறு கலாச்சாரம், பண்பாடு, மதங்கள் பின்பற்றப்படுவதால் பொது சிவில் சட்டம் ஏற்புடையது அல்ல என்றும், 2018இல் மோடி ஆட்சியில் உச்ச நீதிமன்ற 21வது சட்ட ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்தியா பன்முகத் தன்மையுடன் இருப்பதால் பொது சிவில் சட்டம் ஏற்புடையது அல்ல என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி 9 ஆண்டு கால ஆட்சி தோல்வியால் வரும் 2024 தேர்தலை முன்னிட்டு பொது சிவில் சட்டம் என்ற பூச்சாண்டியை பிரதமர் மோடி காட்டுவதாகவும், இந்த பொது சிவில் சட்டம் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் மட்டுமின்றி பெரும்பான்மையான இந்துக்களையும் பாதிக்கக் கூடியது. பொது சிவில் சட்டம் என்பது தேன் கூட்டில் கையை வைப்பது போன்றது. இது மோடி ஆட்சியை கலைக்க, அகற்ற வழிவகை செய்யும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.