ETV Bharat / state

குப்பை தொட்டி கீழ் கிடந்த மனித எலும்பு கூடு - போலீஸ் தீவிர விசாரணை - மனித எலும்பு கூடு

சென்னை அருகே குப்பை தொட்டியின் கீழ் பிளாஸ்டிக் கவரில் கிடந்த மனித எலும்பு கூட்டை கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பை தொட்டி கீழ் கிடந்த மனித எலும்பு கூடு

author img

By

Published : May 28, 2022, 4:46 PM IST

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் தணிக்காச்சலம் (40). இவர் 58ஆவது வார்டு தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு (மே 27) குப்பை வண்டியில் சென்று குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

சூளை காளத்தியப்பா தெரு, வீச்சூர் முத்தையா சந்திப்பு அருகேவுள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் குப்பைகளை எடுப்பதற்காக தணிக்காச்சலம் சென்றபோது, குப்பை தொட்டிக்கு அருகே இருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் எலும்பு கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இது குறித்து அவர் மாநகராட்சி அதிகாரி தீபக் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவம் இடத்திற்குச் சென்ற தீபக் கவரில் இருப்பது மனித எலும்பு கூடு என்பதை உறுதி செய்த நிலையில் இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கவரில் உள்ள எலும்பு கூடை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகேவுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மனித எலும்பு கூடை வீசி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவரைக் கொலை செய்த மனைவி உள்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.