ETV Bharat / state

Senthi Balaji கைதின் போது மனித உரிமை மீறல் - அமலாக்கத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல்
செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல்
author img

By

Published : Jun 20, 2023, 7:35 PM IST

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட்டு, ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத்துறையினரால் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனையில் அவரை சந்தித்த பின் பிற அமைச்சர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஜூன் 15 ஆம் தேதி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை குறித்து அறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர், “அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கையாளப்பட்டதில் மனித உரிமை மீறல் இருப்பதாக தெரிவித்திருந்தார். தன்னை கைது செய்யும்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாகவும், தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகவும் செந்தில் பாலாஜி என்னிடம் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கையாண்டதில் அவர் கீழே விழுந்ததில் பின்னந்தலையில் காயம் அடைந்துள்ளதாக கூறினார். விசாரணையின் போது தன்னை துன்புறுத்திய சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து அவரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனக்கு துன்பம் விளைவித்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். மேலும் கைது நடவடிக்கையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தாக்கியதாகவும் கூறியிருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார். பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், சட்ட நடைமுறைகளின் படி அவருக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும், குற்றம் சாட்டி அமலாக்கத் துறைக்கு எதிராக அவரது மனைவி மேகலா தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

இதையும் படிங்க: எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.