தமிழ் நில போராளிகளுக்கும், பெரியார் ஆதரவாளர்களுக்கும் பாஜகவில் பிடிக்காத முதல் நபராகத் திகழ்பவர் ஹெச்.ராஜா. தமிழ்நாட்டில் மீம் கிரியேட்டர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் இவரே திகழ்ந்து வருகிறார்.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் ஹெச்.ராஜா, தனது மனைவி, பேத்தியுடன் கொடைக்கானல் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் தனது மனைவி, பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டு நாட்கள் குடும்பத்துடன் கொடைக்கானலில். பேத்தி ஜெயலலிதா enjoys vacation" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் இடம்பெற்றுள்ள ஹெச்.ராஜாவின் பேத்தி பெயர் தான் இந்த ட்வீட் வைரலாக காரணமாக இருக்கிறது. பதிவைக் கண்ட பலரும் உங்களது பேத்தியின் பெயர் சூப்பர் எனவும், சிலர் உண்மையிலேயே உங்கள் பேத்தியின் பெயர் ஜெயலலிதாவா? எனவும் கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் உங்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நிறைய வேலை இருக்கும் என பதிவிட, சிலரோ உங்களுக்கு இனி எப்போதும் ஓய்வுதான் எனவும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.