ETV Bharat / state

"கரோனாவால் உயிரிழந்த 444 பேரின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன" - ஆர்.எஸ். பாரதி கேள்வி

சென்னை: கரோனா வைரஸால் உயிரிழந்த 444 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது மறைக்கப்பட்டுள்ளது எனவும், அவர்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டனர் என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி
author img

By

Published : Jul 23, 2020, 9:42 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாலர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி கலாநிதி வீராசாமி, தெற்கு மாவட்ட செயலாலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ம.சுப்பிரமனியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தினர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் மோசடிதான் என்று நினைத்தோம். ஆனால் உயிரிழப்பிலும் மோசடி செய்கின்றனர். கரோனாவால் உயிரிழந்தவர்களில் இதுவரை 444 பேரின் உடல்களை அடக்கம் செய்யப்பட்டதை மறைத்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் உயிரிழப்புக் கணக்கில் மோசடி உள்ளது எனக் கூறியபோது சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்வதாக தெரிவித்தார். உயிரிழந்த 444 பேரின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது.

அதனை தமிழ்நாடு அரசு விளக்கி, உடல்கள் விதிமுறைகளைப் பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டதா என்பதை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமானதற்கு இந்த 444 பேரின் உயிரிழப்பு மறைக்கப்பட்டதும் ஒரு காரணம்.

உயிரிழப்பை மறைத்த முதலமைச்சர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்"எனத் தெரிவித்தார். அதையடுத்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் ம.சுப்பிரமனியன், "அதிமுக முதலில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டநர்கள் எனக் கூறி வந்தனர். தற்போது உயிரிழப்பை மறைத்துவருகின்றனர்" எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆர்.எஸ். பாரதி
இறுதியாக பேசிய எம்.பி கலாநிதி வீராசாமி, "சமூக பரவல் இல்லை என முதலமைச்சர் தொடர்ந்து கூறிவருகிறார். மக்களிடம் உண்மையை சொன்னால் தான் கரோனா பரவலை கட்டுபடுத்த முடியும். அப்படியிருக்கையில் முதலமைச்சர் கரோனா 3 நாள்களில் குறையும், 10 நாள்களில் குறையும் என கூறிக் வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சியில் 190 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.