ETV Bharat / state

உஷார் மக்களே உஷார்... 2020ஆம் ஆண்டை ஆவணங்களில் எப்படி எழுதவேண்டும்...?

2020ஆம் ஆண்டு தொடக்கவுள்ளதையொட்டி 2020ஆம் ஆண்டினை எப்படி ஆவணங்களில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட வேண்டும் என்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

how-to-write-2020-in-statements
how-to-write-2020-in-statements
author img

By

Published : Dec 27, 2019, 11:10 PM IST

2019-ம் ஆண்டு விடைபெற்று 2020-ம் ஆண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்நிலையில் பேங்க் செக்குகள் மட்டுமின்றி முக்கிய ஆவணங்களில் 2020-ம் ஆண்டை அப்படியே 2020 என்று தான் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இல்லையேல் பின்னாளில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக தேதி, மாதம், ஆண்டை குறிப்பிடும் போது ஆண்டின் கடைசி 2 எழுத்துக்களை குறிப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம். குறிப்பாக, இன்றைய தினத்தை (டிசம்பர் 27 ந் தேதி) 27.12.19 என்று 2019-ம் வருடத்தை 19 என்று குறிப்பிடுவோம். ஆண்டை 19 என்று குறிப்பிட்டிருந்து, அதனுடன் எந்த எண்ணை இரு எண்ணை சேர்த்தாலும் பல ஆண்டுகள் வித்தியாசம் வரும். அதாவது 19 உடன் 99ஐ சேர்த்தால் 1999 என்றாகி 20 வருட வித்தியாசம் இருக்கும். ஆனால், இது போல் வரும் 2020-ம் ஆண்டை 20 என்று குறிப்பிட்டால், 2020-க்கு முன்னரோ, பின்னரோ ஒரே ஒரு வருட வித்தியாசம் ஏற்பட்டு பல சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.

குறிப்பாக அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு 10.01.20 என்று குறிப்பிடுகிறோம் என்றால், 20 ஐ அடுத்து வேறு இரு இலக்கங்களை சேர்த்து வருடத்தையே மாற்றி விட வாய்ப்புகள் ஏராளம். அதாவது 19 என்ற எண்ணை சேர்த்து 10.01.2019 என்றோ, 21 என்ற எண்ணைச் சேர்த்து 10.01.2021 என்றோ ஒரு வருடம் முன் தேதியாகவோ, ஒரு வருடம் பின் தேதியாகவோ சிலர் தங்கள் வசதிக்கு மாற்றிவிடலாம். இது போல் வங்கி செக், முக்கியமான ஆவணங்களில், எந்த அடித்தல், திருத்தல் இல்லாமல், கூடுதலாக எண்களை மட்டும் எளிதில் சேர்க்க முடியும். இதனை யாரும் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது. இதனால் சில நேரங்களில் சட்டச் சிக்கல் கூட நேர வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னை, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது.அடுத்து 3030-ம் ஆண்டில் தான் இது போன்ற சிக்கல் நிகழும். எனவே வரும் 2020-ம் ஆண்டில் முக்கிய ஆவணங்களில் தேதி,மாதம், ஆண்டை எழுத்தால் குறிப்பிடும் போது உஷாராய் 2020 என்றே குறிப்பிடத் தவறாதீர்கள். அதே போன்று பிறரிடம் இருந்து முக்கியமான ஆவணங்களை வாங்கும் போதும், 2020 என்று சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என சரிபார்த்துக் கொள்வதும் கூட அவசியம்.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் 2020 அட்டவணை...

Intro:Body:

உஷார் மக்களே.... உஷார்..!! 2020-ம் வருடத்தை தேதி, மாதத்துடன் எப்படி எழுதணும் தெரியுமா..?

இல்லைன்னா சிக்கல் இருக்கு!!

2019-ம் ஆண்டு விடைபெற்று 2020-ம் ஆண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.இந்நிலையில் பேங்க் செக்குகள் மட்டுமின்றி முக்கிய ஆவணங்களில் 2020-ம் ஆண்டை அப்படியே 2020 என்று தான் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இல்லையேல் பின்னாளில் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக தேதி, மாதம், ஆண்டை குறிப்பிடும் போது ஆண்டின் கடைசி 2 எழுத்துக்களை குறிப்பிட்டு பழக்கப்பட்டு விட்டோம். குறிப்பாக, இன்றைய தினத்தை (டிசம்பர் 27 ந் தேதி) 27.12.19 என்று 2019-ம் வருடத்தை 19 என்று குறிப்பிடுவோம். ஆண்டை 19 என்று குறிப்பிட்டிருந்து, அதனுடன் எந்த எண்ணை இரு எண்ணை சேர்த்தாலும் பல ஆண்டுகள் வித்தியாசம் வரும். அதாவது 19 உடன் 99ஐ சேர்த்தால் 1999 என்றாகி 20 வருட வித்தியாசம் இருக்கும். ஆனால், இது போல்  வரும் 2020-ம் ஆண்டை 20 என்று குறிப்பிட்டால், 2020-க்கு முன்னரோ, பின்னரோ ஒரே ஒரு வருட வித்தியாசம் ஏற்பட்டு பல சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.

குறிப்பாக அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு 10.01.20 என்று குறிப்பிடுகிறோம் என்றால், 20 ஐ அடுத்து வேறு இரு இலக்கங்களை சேர்த்து வருடத்தையே மாற்றி விட வாய்ப்புகள் ஏராளம். அதாவது 19 என்ற எண்ணை சேர்த்து 10.01.2019 என்றோ, 21 என்ற எண்ணைச் சேர்த்து  10.01.2021 என்றோ ஒரு வருடம் முன் தேதியாகவோ, ஒரு வருடம் பின் தேதியாகவோ சிலர் தங்கள் வசதிக்கு மாற்றிவிடலாம். இது போல் வங்கி செக், முக்கியமான ஆவணங்களில், எந்த அடித்தல், திருத்தல் இல்லாமல், கூடுதலாக எண்களை மட்டும் எளிதில் சேர்க்க முடியும். இதனை யாரும் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது. இதனால் சில நேரங்களில் சட்டச் சிக்கல் கூட நேர வாய்ப்புள்ளது.

இந்தப் பிரச்னை, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியது.அடுத்து 3030-ம் ஆண்டில் தான் இது போன்ற சிக்கல் நிகழும். எனவே வரும் 2020-ம் ஆண்டில் முக்கிய ஆவணங்களில் தேதி,மாதம், ஆண்டை எழுத்தால் குறிப்பிடும் போது உஷாராய் 2020 என்றே குறிப்பிடத் தவறாதீர்கள். அதே போன்று பிறரிடம் இருந்து முக்கியமான ஆவணங்களை வாங்கும் போதும், 2020 என்று சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என சரிபார்த்துக் கொள்வதும் கூட அவசியம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.