ETV Bharat / state

ஸ்மார்ட்போன் அடிமையா நீங்கள்? தப்பிக்க வழி உள்ளது.. - ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க

How to Overcome Smartphone Addiction: காலை எழும் போதும், தூங்கச் செல்லும் போதும் ஸ்மார்ட் போன் உங்களின் நேரத்தை ஆக்கிரமிக்கிறதா? இது ஒருவகையான உளவியல் அடிமைத்தனம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதிலிருந்து தப்பும் வழிகளை விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு.

செல்போனின் அடிமையா நீங்கள்? வெளியேற வழி உள்ளது..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:00 PM IST

சென்னை: நேரத்தைச் செலவு செய்வதைவிட அதனை முதலீடு செய்வது சிறந்தது. தொலைபேசி என்பது மனிதனின் நெடுந்தூர பயணத்தை தவிர்க்கவும், சரியான நேரத்தில் செய்தியைக் கடத்தவும், நேரத்தைச் சேமிக்கவுமே கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அதன் பயன்களை தவறாக புரிந்துகொள்ளும் நாம், அதனை பொழுதுபோக்குக்கான ஒரு கருவியாக எண்ணி நம் தினசரி வேலைகளையும் கூட கைவிட்டு ஸ்மார்ட்போனில் மூழ்கிவிடுகிறோம். வாழ்க்கைக்கான கனவுகளில் தொலைய வேண்டிய இளைஞர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ் ஆப், இன்ஸ்டகிராம், யூடியூப் இல் தொலைவது வேதனையானது.

ஆனால் ஒரு சிலர் தெளிவாக, அறிவியலின் நோக்கம் அறிந்து அதனை அந்த தேவைக்காக மட்டும் பயன்படுத்துவதில் தங்கள் கனவுகளை வாழ்ந்து வருகின்றனர். நீங்களும் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற விரும்புகிறவர்களாக இருந்தால் இதனை சரியாக பின்பற்றுங்கள் போதும்..

அதிக விழிப்புணர்வு: முதலில் ஸ்மார்ட்போனை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், இதனால் உங்கள் தினசரி வாழ்க்கையில் எந்த அளவு இடையூறுகள் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பெற்றோர் உறவினர் உடனான உறவை எப்படிப் அது பாதிக்கிறது என்பதை கவனித்து அவர்களுடனான சந்திப்பின் போது தொலைப்பேசியை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லலாம்.

சரியான இலக்கை அமைத்துக்கொள்ளுதல்: முடிந்தவரை ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தை (screen time) குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி? வேலை செய்யும் நேரங்களிளும், தூங்கச் செல்லும் நேரங்களிளும் ஸ்மார்ட்போனை சைலண்ட் மோடில் (silent mode) போடலாம். அன்றைய வேலைகளை எழுதி வைத்துக்கொண்டு அதனை மேற்கொள்ளலாம்.

கண்காணிப்பு செயலிகளைப் பயன்படுத்துதல்: நாம் தினசரி எவ்வளவு நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம் என்பதை கண்காணிக்க பல ஆன்லைன் செயலிகள் (online apps) வந்துவிட்டது. அதனை பதிவிறக்கம் செய்து அதில் நேரத்தை செட் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் தானாகவே எச்சரிக்கையை (Alert) பெறமுடியும். இதன் மூலம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க: breakfast-க்கு என்னென்ன சாப்பிடனும், என்ன சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஸ்மார்ட்போனை தவிர்க்க வேண்டிய இடமும் நேரமும்: நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம். தூங்கும் இடமான பெட்ரூம், சாப்பிடும் இடமான டைனிங் டேபிள், வேலை இடங்கள் ஆகியவற்றில் உபயோகிக்க வேண்டாம் என முடிவெடுக்கலாம்.

தேவையற்ற அறிவிப்புகளை (notifications) முடக்கலாம்: நாம் எதோ ஒரு செய்தியை தேடும்போது இடையில் வரக்கூடிய பல நோட்டிபிகேசன்கள் நம் கவனத்தை அதன் மீது திசை திருப்ப வைக்கும். இதனால் ஸ்மார்ட்போனிலேயே பல மணி நேரம் வீணாகும். இந்த தேவையற்ற அறிவிப்புகளை முடக்குவதன் மூலம் அதன் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

மாற்று வழிகளை யோசிக்கலாம்: தொலைப்பேசியை பார்ப்பதற்குப் பதிலாக புத்தக வாசிப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு அல்லது படைப்பாற்றல் (creativity) ஆகியவற்றில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பலாம்.

யோகா அல்லது தியானம் செய்யலாம்: யோகா நம் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவும். இதனை தினம் பின்பற்றுவதன் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம். ஸ்மார்ட்போன் அடிமைகள் மன நிம்மதியை தேடினால் எப்படியும் இங்குதான் வந்தாக வேண்டும்.

யதார்த்த உலகத்துக்குத் திரும்புங்கள்: நாம் ஸ்மார்ட்போனில் பார்ப்பது அனைத்தும் உண்மையல்ல, சில உண்மைகள் பல செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கதைகள். இவற்றை உண்மை என நம்பி நாமும் அதனை பின்தொடர்ந்து செல்லாமல் யதார்த்த உலகத்துக்குத் திரும்புவோம். கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம் இப்போது மீண்டும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள மத்தியில் பெருகிவருகிறது.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் பயம், என்ன செய்தாலும் பயம்: இதற்கு என்னதான் தீர்வு.?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.