சென்னை: நடிகர் கமலஹாசனின் தெனாலிராமன் படத்தில் வருவதுபோல் "எனக்கு எல்லாம் பயமயம்" இருமினால் பயம், தும்மினால் பயம், நெரிசல் பயம், தனிமை பயம், இருள் பயம், பகல் பயம் எதற்குப் பயம் என்று சொல்வதற்கே பயம் என்று யாரேனும் இருக்கிறீர்களா? இது ஒருவகையான கவலை மற்றும் பயத்தின் காரணமாக ஏற்படும் நோய் என்று கூறலாம். ADHD (Attention-deficit/hyperactivity disorder), நாள்பட்ட மன அழுத்தம், சித்தப்பிரமை ( பகுத்தறிவற்ற சந்தேகம் அல்லது மற்றவர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சிந்தனை), தூக்கமின்மை போன்ற பல மனநல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
ஹிப்னோதெரபி என்றால் என்ன?
ஹிப்னோதெரபி என்பது பல மன அல்லது உடல் ரீதியான நோய்களைக் கையாள்வதற்கான ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். ஹிப்னோதெரபி ஆழ் மனதிற்குள் சென்று ஆய்வு செய்து நோயாளியின் மன ரீதியான பிரச்சனைகள் குறித்து கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறை. இதன் மூலம், மனரீதியாக பிரச்சனை உள்ளவர்கள் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி அதிலிருந்து வெளிவருவதற்கு இந்த சிகிச்சை உகவுகிறது. மேலும், இவை மனதை மாற்றியமைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் தேவையற்ற நடத்தைகளை சமாளிக்கவும், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்திற்கும், நல்வாழ்விற்கும் உதவுகிறது.
ஹிப்னோதெரபி பயத்திற்கு எவ்வாறு உதவுகிறது?
பொதுவாக சிலருக்கு இருட்டை பார்த்தால்ம பயம், கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம் ஏன் சில நேரங்களில் அவர்களின் நிழலை பார்த்து அவர்களே பயந்துபோவார்கள். இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அச்சப்படுவதால் அவர்களின் வாழ்கையில் நிம்மதி என்பது கேள்விக் குறியாகிவிடும் நிலை ஏற்படும். இந்த பயம் திடீர் என்று தொடங்குவது இல்லை, அவர்களின் சிறுவயதிலிருந்தே பின் தொடர்கிறது. அவர்களுக்கு போதுமான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கி பயமற்ற நிம்மதியான வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்க இந்த ஹிப்னோதெரபி மிகுந்த உதவியாக இருக்கிறது.
பயத்தின் அறிகுறிகள்
- இதயத் துடிப்பு
- மூச்சுத்திணறல்
- வியர்வை
- உடலில் நடுக்கம்
- வயிற்றில் அசௌகரியம் போன்ற தோன்றம்
ஹிப்னோதெரபியை யார் முயற்சிக்க வேண்டும்?
பயம், பதட்டம், மன அழுத்தம், கோபம் , துக்கம் மற்றும் இழப்பு, உடல் வலி, உடல் எடைப் பிரச்சினைகள், புகைபிடித்தல் அல்லது அதிகமாக சாப்பிடுதல், நாள்பட்ட வலிகள் மற்றும் தூக்கமின்மை, விவரிக்கப்படாத ஒவ்வாமை என தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை நிறுத்த விரும்பும் மக்களுக்கு ஹிப்னாஸிஸ் உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஹிப்னோதெரபியின் வகைகள்
- அதிர்ச்சிக்கான ஹிப்னோதெரபி
- பயத்தை போக்க ஹிப்னோதெரபி
- உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கான ஹிப்னோதெரபி
- குழப்பமான கனவுகளுக்கான ஹிப்னோதெரபி
- எடை இழப்புக்கான ஹிப்னோதெரபி
- தூக்கமின்மைக்கான ஹிப்னோதெரபி
- விவரிக்கப்படாத ஒவ்வாமைக்கான ஹிப்னோதெரபி
- உறவுச் சிக்கல்களுக்கான ஹிப்னோதெரபி
- இறந்தவர்களுடன் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கான ஹிப்னோதெரபி
- விவரிக்க முடியாத மன வலி மற்றும் உடல் வலிகளுக்கான ஹிப்னோதெரபி
- தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விடுவிப்பதற்கான ஹிப்னோதெரபி
- போதைக்கு ஹிப்னோதெரபி
ஹிப்னோதெரபியை யார் முயற்சிக்கக் கூடாது?
மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்கள் பொதுவாக ஹிப்னாஸிஸைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் இந்த சிகிச்சையை முயற்சிக்கும் முன் தங்கள் மருத்துவர்களிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: Mustard oil Health Benefits in tamil: கடுகு எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!