ETV Bharat / state

சென்னையில் சிக்கிய கள்ளநோட்டு கும்பல்..! இப்படித்தான் இருக்கும் கள்ள நோட்டு.. பொதுமக்களே உஷார்.. - கள்ள நோட்டு அச்சடித்த முன்னாள் இராணுவ வீரர்

Chennai Fake currency gang busted: காய்கறி வாங்குவது போல நடித்து கள்ள நோட்டுகளை மாற்றிய வழக்கறிஞர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்ட நிலையில், பல நாட்களாக காய்கறி வாங்குவது போல நடித்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது.

துணை ஆணையர் சேகர் தேஷ்முக்
துணை ஆணையர் சேகர் தேஷ்முக்
author img

By

Published : Aug 18, 2023, 7:24 PM IST

துணை ஆணையர் சேகர் தேஷ்முக் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: கள்ள நோட்டு மோசடி வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது குறித்து விளக்கியுள்ளார். "நேற்று மாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காய்கறி வைத்திருக்கும் மணி என்பவர், 4 கள்ள நோட்டுகள் கொண்டு வந்து ஒருவர் காய்கறி வாங்க வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

மணி கொடுத்த புகாரின் பேரில் கள்ள நோட்டு வைத்திருந்த அண்ணாமலை என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, கள்ள நோட்டை கொடுத்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்ததையடுத்து, அவரையும் கைது செய்து, அவரது வீட்டை சோதனை செய்த போது, 90 பண்டல்களில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என 45 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பிரிண்டிங் மிஷின், பேப்பர் கட்டிங் மிஷின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது" என கூறினார்.

மேலும் இவர்களிடம் நடத்திய புலன் விசாரணையில், இவர்கள் 5 மாதம் முன்பு வடபழனியில் உள்ள ஒரு பிரஸ்ஸில் 50 லட்ச ரூபாய் கள்ள நோட்டை அச்சடித்தது தெரியவந்ததுள்ளதாகவும், பின்னர் சுப்பிரமணி அவரது நண்பரான அண்ணாமலையிடம் கள்ள நோட்டை கொடுத்து, 5 முறை காய்கறி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலை என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதையும், சுப்பிரமணி என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இவர்கள் அசல் ரூபாய் நோட்டு போல அச்சடித்து, அதை புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தார்.

பொதுமக்கள் பண நோட்டுகளை பெறும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தாங்கள் பெறும் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக வங்கியில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த கள்ள நோட்டு புழக்கம் என்பது மிகப்பெரிய குற்றம் எனவும், இதனை தடுக்க பொதுமக்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இதனை தொடர்ந்து துணை ஆணையர் சேகர் தேஷ்முக் ஆர்.பி.ஐ அச்சடித்த அசல் நோட்டிற்கும், கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் அச்சடித்த கள்ள நோட்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னென்ன என்பதை மக்களுக்கு விளக்கி காண்பித்தார்.

மேலும் மாநிலத்தின் தலைநகரின் முக்கிய இடத்தில் கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மோசடியில் ஈடுபட்டவர்களுள் ஒருவர் நாட்டின் முன்னாள் இராணுவ வீரர் என்பதும், மற்றொருவர் வழக்கறிஞர் என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ள நோட்டுகளை அச்சடித்த கும்பல் - காய்கறி சந்தையில் இருந்து சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.