ETV Bharat / state

ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது எப்படி? ரிசர்வ் வங்கி சொல்லும் யோசனையை கேளுங்க - ரூ 2000 நோட்டுகளை திரும்பப் பெற காரணம் என்ன

ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள மத்திய ரிசர்வ் வங்கி இந்த ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்துள்ளவர்கள் அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 19, 2023, 8:45 PM IST

Updated : May 19, 2023, 8:58 PM IST

மும்பை: 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுக்களை தற்போது திரும்பப் பெறுகிறது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ததற்கான நோக்கம் நிறைவேறியுள்ளது. அதாவது பொதுமக்களின் கையில் போதுமான பணப்புழக்கம் உள்ளது என கருதும் ரிசர்வ் வங்கி இதனாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகிறது.

இப்போது உங்கள் கைகளில் 2ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்தால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. அதனை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவோ, அல்லது மற்ற கரன்சிக்களாக மாற்றிக் கொள்ளவோ எளிமையான வழிமுறைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

  1. பொதுமக்கள் தங்கள் வசமுள்ள ரூ.2000 நோட்டுக்களை அருகிலுள்ள எந்த வங்கி கிளையையும் அணுகி டெபாசிட் செய்யவோ எக்ஸ்சேஞ்ச் செய்யவோ எந்த தடையும் இல்லை.
  2. வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதில் எந்த தடையும் இல்லை. ஏற்கெனவே உள்ள நிலையான வழிமுறைகளை பின்பற்றி வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
  3. வங்கிகளில் அன்றாட செயல்பாடுகள் மற்றும் இயக்கத்தை பாதிக்காத வணணம் சில வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
  4. ரூ.2,000 நோட்டுக்களை மற்ற நோட்டுக்களாக வங்கி கிளையிலேயே மாற்றி வாங்க அதிகபட்சமாக ஒரு நபருக்கு ரூ.20,000 மட்டுமே வாங்க இயலும்.
  5. மே 23,2023 முதல் ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் இதற்கென தனி கவுண்டர்கள் அமைக்கப்படும்.
  6. இந்த பணியை குறிப்பிட்ட கால இடைவெளியில் முடிக்கும் விதமாக செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் அனைத்து வங்கிகளும் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொண்டுக்க வேண்டும என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  7. வங்கிகள் இந்த பணியை மேற்கொள்வதற்காக தனியான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
  8. இது மட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் மே 23 முதல் ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்பாடு செய்யப்படும்.
  9. வங்கிகள் ரூ.2,000 நோட்டுக்களை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  10. பொதுமக்கள் செப்டம்பர் 30,2023 வரையிலான அவகாசத்தை பயன்படுத்தி தங்களிடம் உள்ள ரொக்கப் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Last Updated : May 19, 2023, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.