ETV Bharat / state

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வேண்டாம்; கண் மருத்துவர் எச்சரிக்கை..!

கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்குப் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். பட்டாசு வெடிப்பதால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான நெறிமுறைகளை விளக்குகிறார் கண் மருத்துவர் செளந்தரி.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 20, 2022, 4:44 PM IST

சென்னை: பட்டாசு வெடிப்பாதல் ஏற்படும் கண் எரிச்சல் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களுக்கு அதிக எரிச்சலை விளைவிக்கக்கூடும் என டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், கண்மருத்துவருமான சௌந்தரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “தீபாவளி என்றாலே புத்தாடைகள், பரிசுகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பட்டாசுகள், வானவேடிக்கைகள் என்பவை நமக்கு நினைவுக்கு வரும்.

கண் மருத்துவர் செளந்தரி
கண் மருத்துவர் செளந்தரி

பட்டாசுகளை வெடிப்பதற்கு வயது ஒரு காரணியாக இருப்பதில்லை. அனைவருமே பட்டாசு வெடிப்பதையும், வானவேடிக்கைகளையும் விரும்புகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இருக்க இயலாது. பட்டாசுகளோடு தீபாவளி திருநாளைக் கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாகவே இருந்து வருகின்ற நிலையில், அவைகளைக் கையாளும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

தீபாவளி கொண்டாட்ட காலத்தின்போது பட்டாசுகளாலும், வானவேடிக்கைகளாலும் நிகழ்கின்ற பெரும்பான்மையான காயங்கள், கண்கள் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் மிகக் கடுமையான காயங்கள் கூட ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பதன் காரணமாக, பிரதானமான கண் காயங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

உண்மையில் கைகள் மற்றும் விரல்களுக்குப் பிறகு மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற உடற்பகுதியாக இருப்பது கண்கள் தான். பொதுவா மத்தாப்புகள், சங்குச்சக்கரங்கள், வெடி ஆகியவற்றை வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாகக் கண்களில் காயங்கள் ஏற்படுகின்றன.

அதிக இடர் ஆபத்துள்ள நபர்கள்

கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளவர்கள் பட்டாசுகள், வெடிகளைக் கையாள்கின்ற நபர்களோடு அருகில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் தான். இப்படி அருகிலிருந்து வேடிக்கை பார்க்கும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான நபர்களுக்குக் கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது. சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கும்போது, அச்சாலைகளைக் கடந்து செல்கின்ற நபர்கள் இவற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக இருக்கின்றனர்.

காயங்களின் வகை

கண்களில் ஏற்படும் காயங்களின் தீவிர தன்மையானது லேசான எரிச்சலிலிருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்ப்புகள் வரையிலும் மற்றும் பார்வைத்திறன் இழப்பிற்கு வழி வகுக்கின்ற காயம் வரை இருக்கக்கூடும். பட்டாசுகள் மற்றும் வெடிகளில் கலக்கப்படுகின்ற வெடிமருந்துகளில் உள்ள வேதிப்பொருள்களின் காரணமாக வேதியியல் காயங்களும் ஏற்படுகின்றன.

வெடிகளினால் ஏற்படுகின்ற தொடர் புகையானது, தொண்டையிலும் மற்றும் கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி, கண்களிலிருந்து நீர் வழியச் செய்யும். பட்டாசு வெடிக்கும்போது வெளிவருகின்ற புகையானது, தொண்டை அழற்சியோடு, அதில் பிற தொற்றுகளையும் விளைவிக்கக்கூடும். மத்தாப்புகள் மிக ஆபத்தானவையாகும். ஏனெனில், தங்கத்தை உருக்கும் அளவிற்குத் திறனோடு (1,800° F) உயர் வெப்பநிலையில் அவைகள் எரிகின்றன.

தண்ணீரின் கொதிநிலையை விட ஏறக்குறைய ஆயிரம் டிகிரி இந்த வெப்பநிலையானது அதிகமாகும். கண்ணாடியையே உருக்கிவிடும் அளவிற்கு இருக்கும். இதனால், சருமத்தில் மூன்றாவது நிலை தீக்காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, இத்தகைய காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

பெரும்பாலான வெடிகள் மற்றும் பட்டாசுகளில் வெடிமருந்து அடைக்கப்பட்டிருக்கிறது. பட்டாசுகள் மற்றும் வெடிகள் வெடிப்பதை முன் கணிக்க இயலாது என்பதால், அதைக் கையாளும் நபர் கவனமாக இருந்தாலும் அல்லது ஒருவரது மேற்பார்வையின் கீழ் வெடித்தாலும் கூட காயங்கள் ஏற்படக்கூடும். தீபாவளி கொண்டாட்ட தினங்களின் போது காற்றில் மாசு அளவுகள் உச்சத்தை எட்டுகின்றன. காற்றில் நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் சல்பைட் ஆக்சைடு அளவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன.

அத்துடன், ஒலி மாசு அளவும் அனுமதிக்கப்பட்ட அளவையும் கடந்து விடுகின்றன. புஸ்வானம் மற்றும் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட்டுகள் போன்றவற்றில் எண்ணற்ற சிறுதுகள்கள் அடைக்கப்பட்டுள்ளன. இவைகள் அதிவேகத்தில் பயணிப்பதால் திசுக்களுக்குச் சேதத்தை விளைவிக்கின்றன. நீண்டநேரம் நேரடி வெப்ப சூழலுக்கு உட்படுத்தப்பட்டால், கண்களில் அணிந்துள்ள கான்டாக்ட் லென்சுகள் கண்களுக்கு எரிச்சலை விளைவிக்கக்கூடும்.

எனவே, பட்டாசுகளை வெடிக்கின்றபோது கான்டாக்ட் லென்சுகளை அணிந்திருக்கும் நபர்கள் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுருக்கமாகக் கூறுவதென்றால், பட்டாசுகள் , வெடிகளால் கண்களுக்கு ஏற்படுகின்ற சேதமானது அந்த வெடியின் திசை வேகத்தை அல்லது கண்ணைத் தாக்குகின்ற அதன் தீவிரத்தைச் சார்ந்திருக்கும். கண்ணில் ஏற்படுகிற வேதியியல் மறுவிளைவுகள் மற்றும் வெப்ப நிலையிலான தீ காயங்களைச் சார்ந்தும் கண்ணில் சேதம் இருக்கும்.

கண்களில் ஏற்படக்கூடிய முக்கியமான காயங்கள்

திறந்தநிலை கருவிழி காயம், கண் சுவரில் ஊடுருவுகிற முழு அடர்த்தி காயம், மூடியநிலை கருவிழி காயம், கண் சுவரில் கிழிதல்/கீறலை ஏற்படுத்துகிற முழு அடர்த்தி காயம் இல்லாமல் கருவிழிக்கு ஏற்படுகிற காயம், கன்றி போகுதல், கண்ணைச் சுற்றிச் சிராய்ப்பு, ஏடுகளான கீறல், கண் சுவரில் பகுதியளவு அடர்த்தி நிலை காயம், கீறல், ஒரு கூர்மையான பொருளால் விளைவிக்கப்படுகிற கண் சுவரின் முழு அடர்த்திநிலை காயம் உள்படப் பல காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மூடப்பட்ட நிலை காயங்களுடன் வரும் நோயாளிகளுக்கு வெளி நோயாளி அடிப்படையில் சிகிச்சையளிக்கப்படும். திறந்தநிலை கண் காயம், கருவிழி மற்றும் வெண்படலத்தில் கிழிசல்கள், இரத்தக்கசிவு தேக்கத்துடன் காயமேற்படுத்திய திரைப்பிரித்தல், கண்ணுக்குள் அந்நியப்பொருள்கள் இருப்பதாக சந்தேகிப்பு (IOFB) மற்றும் கருவிழி கிழிசல் ஆகிய பாதிப்புகள் உள்ள நோயாளிகள் மேல் அதிக சிகிச்சை மேலாண்மை மற்றும் கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

கண்களைத் தேய்க்கவோ அல்லது கண்களைச் சொறியவோ கூடாது. உங்கள் கண்களையும், முகத்தையும் முறையாகக் கழுவ வேண்டும். கண்ணில் எரிச்சல் அல்லது அந்நியப் பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, தொடர்ச்சியாக நீரைக்கொண்டு கண்களை அலசவும். கண்ணில் துகள் எதுவும் சிக்கியிருக்குமானால் அல்லது பெரிதாக இருக்குமானால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்காதீர்கள்.

கண்களை மூடிய நிலையில் வைத்து உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும். கண்களுக்குள் ஏதாவது வேதிப்பொருள் நுழைந்திருக்குமானால், 30 நிமிடங்களுக்கு நீரைக்கொண்டு உடனடியாக கண்களையும் மற்றும் கண் இமைகளுக்கு கீழேயும் நன்கு அலசவும். ஒரு கண் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சைக்குச் செல்லவும்.

செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

குழந்தைகள் பாதிக்கப்பட்ட கண்ணைத் தேய்க்கக்கூடாது. ரத்தக் கசிவை இது அதிகரிக்கக்கூடும் அல்லது காயத்தை மோசமாக்கக்கூடும். பாதிக்கப்பட்ட கண்ணின் மீது அழுத்தக்கூடாது. ஒரு ஃபோம் கப்பை அல்லது ஜுஸ் அட்டைப்பெட்டியின் அடிப்பகுதியைக் கண்களில் வைத்திருப்பது அல்லது டேப் கொண்டு ஒட்டுவது என்பவை பின்பற்றக்கூடிய இரு ஆலோசனை குறிப்புகளாகும்.

வலி நிவாரணிகள் உள்பட OTC மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஆயின்மென்ட்டை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். பாதிப்படைந்த கண்ணைப் பரிசோதித்து, பாதிப்பு நிலையைச் சரியாக அடையாளம் காண்பதை மருத்துவருக்கு இது சிரமமானதாக ஆக்கிவிடும். வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை இருப்பினும்கூட, பட்டாசுகளோடு விளையாடக் குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

எச்சரிக்கையோடு இருங்கள்

திறந்தநிலை அமைவிடத்தில் மட்டுமே பட்டாசுகள், வெடிகளை வெடிக்க வேண்டும். அப்போது கண் கவசங்களை அணிந்திருக்க வேண்டும். வெடித்தபிறகு சுத்தமான நீரைக்கொண்டு கைகளைக் கழுவ வேண்டும். குழந்தைகள் வெடிகள், பட்டாசுகளைக் கையாளும்போது பெரியவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். எந்தவொரு காயத்தையும் லேசானதாகக் கருதாதீர்கள். மருத்துவரைச் சந்தித்து உரியச் சிகிச்சை உதவியைப் பெறுங்கள்.

எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் தயார் நிலையில் நீர் மற்றும் மணலை வாளிகளில் வைத்திருக்கவும். பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் வானவேடிக்கைகளைக் குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாறு தள்ளி ஒரு பாதுகாப்பான இடத்தில் மூடிய பெட்டிக்குள் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது முகம், தலைமுடி மற்றும் ஆடைகளில் படாதவாறு தள்ளி நின்று வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை வெடிக்கும்போது செயற்கை ஆடைகளை அணியாதீர்கள். பட்டாசுகளைக் கொளுத்தும்போது போதுமான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். வெடிகள், பட்டாசுகள் வெடிப்பதை வேடிக்கை பார்ப்பதென்றால் குறைந்தது 5 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவும். பட்டாசுகளை வெடிக்கச் செல்வதற்கு முன்பு உங்களது கான்டாக்ட் லென்சுகளை கண்களிலிருந்து அகற்றிவிடவும். உங்களது கண்களை ஒரு சிறப்பான வழியில் பாதுகாக்கக்கூடிய கண் கண்ணாடிகளை அதற்குப் பதிலாகப் பயன்படுத்தவும்.

வெடித்த, பயன்படுத்தி வெடிக்காத பட்டாசுகளைத் தூக்கியெறிவதற்கு முன்பு தண்ணீர் உள்ள வாளிக்குள் அவைகளை முக்கியெடுக்கவும். எரிந்து கொண்டிருக்கின்ற பட்டாசுகள் மீது கவனக்குறைவாகக் கால்களை வைத்து விடுவதிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த காலகட்டத்தில் நல்ல காலணிகளைத் தவறாது அணிந்திருக்கவும். தீபாவளி திருநாளை அதிக பாதுகாப்பானதாக, அதிக பசுமையானதாக மற்றும் அதிக ஆரோக்கியமுள்ளதாகக் கொண்டாடுவோம்” என்றார்.

இதையும் படிங்க: தீபாவளி: கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.