ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முழுவதுமாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வீடுகளிலிருக்கும் மின்சாதனப் பொருள்களைக் கையாளும் முறைகள் குறித்து தமிழ்நாடு மின் வாரியம் விளக்கியுள்ளது.
அவை பின்வருமாறு:
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுவர் மற்றும் தரைப் பகுதிகளைத் தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சோப் அல்லது கிருமி நாசினிகள் கொண்டு கழுவ வேண்டும்
- மின்சார சுவிட்சுகள், கம்ப்யூட்டர் மவுஸ், கீ போர்டு, கதவுப் பிடிகள் உள்ளிட்டவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
- அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்
- மேலும், செல்போன்கள், ஐபேடுகள் ஆகியவற்றையும் கிருமி நாசினிகளால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- புதிதாக யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது
- வீட்டில் உள்ளோர் வெளியே சென்று வந்தவுடன் கைகளைக் கழுவாமல் மேற்படி மின்சாதனப் பொருள்களைத் தொடுதல் கூடாது
- மின் சாதனப் பொருள்கள் மீது கிருமி தொற்று ஏற்பட்டால், அவை சில நாள்களுக்கு உயிர் வாழும் என்பதால் மிகவும் கவனத்துடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்
- குறிப்பாக, அவற்றைத் தொடுவதற்கு முன்பு கைகள் சுத்தமாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்
- இந்த அறிவுரைகள் வீடுகளில் கிருமி தொற்று ஏற்படாதபடி பாதுக்காப்பு வழங்கும் எனதால் பொதுமக்கள் இதனைக் கடைப்பிடிக்கலாம்
இவ்வாறு வாரியம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் - அமைச்சர் விஜயபாஸ்கர்; முடிந்தது பனிப்போர்!