கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிலர் அதைக் கடைப்பிடிக்காமல் சாலைகளில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். அப்போது, காவல் துறையினர் அவ்வாறு சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை வழக்குகள்?
- காஞ்சிபுரத்தில் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 91 பேர் கைது செய்யப்பட்டு 187 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 199 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 64 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 274 பேர் மீது வழக்குப்பதிவு, 277 பேர் கைது, 296 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- விழுப்புரம் மாவட்டத்தில், 529 பேர் மீது வழக்குப்பதிவு, 530 பேர் கைது, 415 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 142 பேர் மீது வழக்குப்பதிவு, 142 பேர் கைது, 97 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கடலூர் மாவட்டத்தில், 238 பேர் மீது வழக்குப்பதிவு, 397 பேர் கைது, 93 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- வேலூர் மாவட்டத்தில், 306பேர் மீது வழக்குப்பதிவு, 367 பேர் கைது, 276 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ராணிபபேட்டை மாவட்டத்தில், 66 பேர் மீது வழக்குப்பதிவு, 93 பேர் கைது, 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருப்பத்தூரில், 46 பேர் மீது வழக்குப்பதிவு, 58 பேர் கைது, 96 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருவண்ணாமலையில், 761 பேர் மீது வழக்குப்பதிவு, 903 பேர் கைது, 772 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருச்சியில், 286 பேர் மீது வழக்குப்பதிவு, 475 பேர் கைது, 50 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- புதுக்கோட்டையில், 245 பேர் மீது வழக்குப்பதிவு,465 பேர் கைது, 271 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கரூரில், 58 பேர் மீது வழக்குப்பதிவு, 79 பேர் கைது, 26 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- பெரம்பலூரில், 84 பேர் மீது வழக்குப்பதிவு, 105 பேர் கைது, 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- அரியலூரில், 138 பேர் மீது வழக்குப்பதிவு, 147 பேர் கைது, 96 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- தஞ்சாவூரில், 333 பேர் மீது வழக்குப்பதிவு, 358 பேர் கைது, 174 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருவாரூரில், 344 பேர் மீது வழக்குப்பதிவு,348 பேர் கைது, 328 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- நாகப்பட்டினத்தில், 407 பேர் மீது வழக்குப்பதிவு, 458 பேர் கைது, 311 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூரில், 46 பேர் மீது வழக்குப்பதிவு, 40 பேர் கைது, 75 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ஈரோட்டில், 4 பேர் மீது வழக்குப்பதிவு, 2பேர் கைது, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருப்பூரில், 41 பேர் மீது வழக்குப்பதிவு, 44 பேர் கைது, 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- நீலகிரியில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
- நாமக்கல்லில், 10 பேர் மீது வழக்குப்பதிவு, 45 பேர் கைது, 33 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கிருஷ்ணகிரியில், 11 பேர் மீது வழக்குப்பதிவு, 17 பேர் கைது, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- மதுரையில், 201 பேர் மீது வழக்குப்பதிவு, 209 பேர் கைது, 136 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- விருதுநகரில், 366 பேர் மீது வழக்குப்பதிவு, 412 பேர் கைது, 234 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திண்டுக்கல், 523 பேர் மீது வழக்குப்பதிவு, 716 பேர் கைது, 377 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- தேனியில், 237 பேர் மீது வழக்குப்பதிவு,301 பேர் கைது, 213 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- ராமநாதபுரத்தில், 152 பேர் மீது வழக்குப்பதிவு, 231 பேர் கைது, 87 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சிவகங்கையில், 106 பேர் மீது வழக்குப்பதிவு, 111 பேர் கைது, 88 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருநெல்வேலியில், 103 பேர் மீது வழக்குப்பதிவு, 136 பேர் கைது, 69 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- தென்காசியில், 143 பேர் மீது வழக்குப்பதிவு, 183பேர் கைது, 216 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- தூத்துக்குடியில், 34 பேர் மீது வழக்குப்பதிவு, 46 பேர் கைது, 28 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கன்னியாகுமரியில், 228 பேர் மீது வழக்குப்பதிவு, 132 பேர் கைது, 64 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சென்னையில், 91 பேர் மீது வழக்குப்பதிவு, 94 பேர் கைது,49 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சேலத்தில், 36 பேர் மீது வழக்குப்பதிவு, 40 பேர் கைது, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கோயம்புத்தூரில், 12 பேர் மீது வழக்குப்பதிவு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- திருப்பூரில், 74 பேர் மீது வழக்குப்பதிவு, 86 பேர் கைது, 39 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- திருச்சியில், 159 பேர் மீது வழக்குப்பதிவு, 426 பேர் கைது, 152 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- தென்காசியில், 21 பேர் மீது வழக்குப்பதிவு, 18 பேர் கைது, 64 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 7,119 பேர் மீது வழக்குப்பதிவு, 8795 பேர் கைது, 5501 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா: 38 பேருக்கு உறுதி; 277 பேர் தொடர் கண்காணிப்பு