ETV Bharat / state

"செம்பரம்பாக்கம் ஏரி சம்பவம் வேறு; சாத்தனூர் அணை சம்பவம் வேறு" - அமைச்சர் ரகுபதி விளக்கம்! - MINISTER REGUPATHY

சாத்தனூர் அணை படிப்படியாக தான் திறந்து விடப்பட்டதால், எந்தவிதமான உயிரிழப்புகளும், பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், செம்பரம்பாக்கம் ஏரி சம்பவம் வேறு; சாத்தனூர் அணை சம்பவம் வேறு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 8:48 PM IST

Updated : Dec 4, 2024, 11:08 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் அருணா, எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "தற்போது பெய்த பெரு மழை மற்றும் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தண்ணீர் உடனடியாக வடிந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முறையாக திட்டமிட்டது காரணம்.

செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்டதால் தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்புகளும் பெரும் பாதிப்பும் ஏற்பட்டது. ஆனால், சாத்தனூர் அணை படிப்படியாக தான் திறந்து விடப்பட்டது. அதன் காரணமாக தான் எந்தவிதமான உயிரிழப்புகளும், பாதிப்பும் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி சம்பவம் என்பது வேறு; சாத்தனூர் அணை சம்பவம் என்பது வேறு; இரண்டையும் ஒப்பிட முடியாது.

அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். உடனடி நிவாரண தொகையாக ரூ.2,000 கோடி தேவை என்று முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை மத்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை.

ஆனால் நேற்று கிடைத்த செய்தியில் மத்திய அரசு தமிழகத்திற்கு வேண்டிய உதவிகள் செய்யும் என்று தகவல் வந்துள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்றால் அது காவி நிறம் தான். அதில் என்ன தவறு உள்ளது? மத்திய அரசின் நிறம் காவி தான்.

தண்ணீர் அதிகளவு அழுத்தமாக வரும் போது பாலம் இடிந்து விடுவது சகஜம் தான். இருப்பினும் வல்லுநர் குழு இது குறித்து ஆய்வு செய்யும். ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும், கொடுக்காததும் அந்தந்த முதலமைச்சரின் விருப்பம். அதற்கு யாரும் தலையிட முடியாது.

இதையும் படிங்க : சேற்றை அடித்தது; சாலை மறியல் போராட்டம் எல்லாம் அரசியல் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறைக்கு சென்றபோது அமைச்சராக இருந்தார். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இதில், எந்த விதமான தவறும் இல்லை. மதுரை டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், இது தேவை இல்லை என்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளோம். தீர்மானத்தை நாங்கள் கொண்டு வரும்போது திமுக எப்படி இரட்டை வேடம் போட முடியும். இதனால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இந்த முடிவு எடுத்துள்ளோம்.

தமிழக அரசு ஏற்கனவே இதற்கு அனுமதி கூறி கடிதம் எழுதி உள்ளதாக மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் இது குறித்து அந்த துறை அமைச்சர் விளக்கம் அளிப்பார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, நாங்கள் எந்த அழுத்தமும் அவர்களுக்கு அளிக்கவில்லை. திருமாவளவன் போவதும், போகாததும் அவருடைய விருப்பம்.

எடப்பாடி பழனிசாமி அனாவசியமாக கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றம் கூட உள்ளது; சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கட்டும் அதற்குண்டான பதிலடி முதலமைச்சர் அளிப்பார். இந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. யாரும் இந்தி கற்றுக் கொள்ளக்கூடாது என்று எங்களுடைய நிலைப்பாடு கிடையாது. ஒருவர் சேற்றில் நடந்து செல்லும் போது சேறு படுவது என்பது இயல்பு. இருப்பினும் பொன்முடிக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு" என்று கூறினார்.

Last Updated : Dec 4, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.