ETV Bharat / state

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன? - etv news

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன? என அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாள வேண்டும்

author img

By

Published : Mar 13, 2021, 12:16 PM IST

சென்னை: உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்ற? என்று அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை, 10 நாட்களுக்கு பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுதரப்பில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்று வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், உரிமை கோரப்படாத உடல்கள் மருத்துவமனைகளில் எப்படி கையாளப்படுகிறது? என்பது குறித்து விதிகளுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய சில்வர் தூக்குவாளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.