ETV Bharat / state

கோவிட் தடுப்பில் ஆரோக்கிய சேது செயலியின் பங்கு - கரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், தனியார் பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் வேலை செய்பவர்கள் இந்தச் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

arogya
arogya
author img

By

Published : Jul 20, 2020, 4:34 AM IST

தமிழ்நாட்டில் கோவிட் 19 தடுப்பு செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முன்னெடுப்பகளை அரசு மேற்கொண்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கான முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொள்வதில் Tamil Nadu e- governance agency (TNeGA) இ- நிர்வாக போர்ட்டல் பெரும்பங்காற்றிவருகிறது. இது ஒருபுறம் இருக்க மத்திய அரசின் முக்கிய முன்னெடுப்பான ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன.

கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிய ஆரோக்கிய சேது செயலி முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் இதுவரை சுமார் 12.5 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். உலகிலேயே கான்டாக்ட் ட்ரேசிங் எனப்படும் கரோனா பாதித்தவர்களின் தொடர்புடையவர்களைக் கண்டறிய பயன்படும் முதன்மை செயலியாக ஆரோக்கிய சேது தற்போது உள்ளது.

தமிழ்நாட்டிலும் அரசு அலுவலகங்கள், தனியார் பணியிடங்கள் உள்ளிட்டவற்றில் வேலை செய்பவர்கள் இந்தச் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விமானப் போக்குவரத்து மேற்கொள்ளும் நபர்களும் இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆரோக்கிய சேது செயலியுடன் ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் தொலைபேசி முறையில் சந்தேகளுக்கு விளக்கம் பெறும் வசதியை தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது.

இதன் மூலம் மருத்துவ ஆலோசனைகளை நேரடியாக பெற வசதியில்லாதவர்கள் இலவசமாக வீட்டிலிருந்தபடியே பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பயன்படுத்தியுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ சேவைகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள நடைமுறை சிக்கலை ஆரேக்கிய சேது போன்ற செயலிகள் ஓரளவு ஈடுகட்டுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.